பாதுகாப்பு அமைச்சகம்

காணாமல் போன தமிழ்நாட்டு மீன்பிடி படகை இந்திய கடலோர காவல்படை மீட்டது

Posted On: 01 MAY 2021 6:18PM by PIB Chennai

நடுக்கடலில் நடைபெற்ற இந்திய கடற்படையின் மற்றுமொரு வெற்றிகரமான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த காணாமல் போன மீன்பிடி படகான மெர்சிடஸ் இந்தியக் கடற்படையால் வெற்றிகரமாக மீட்கப்பட்டது.

2021 ஏப்ரல் 24 அன்று தொடங்கிய இந்த தேடுதல் நடவடிக்கை சுமார் 1,100 கிலோமீட்டர்களுக்கு நடைபெற்றது. 2021 ஏப்ரல் 6 அன்று தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 11 பேருடன் கடலுக்கு கிளம்பிய இந்த படகு காணாமல் போனது குறித்து 2021 ஏப்ரல் 24 அன்று தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

படகு மூழ்கி இருக்கக்கூடும் என்று சந்தேகம் ஏற்பட்ட நிலையில், நான்கு நாட்கள் தீவிர தேடுதல் நடவடிக்கைக்கு பிறகு, லட்சத்தீவுகளுக்கு 370 கிலோமீட்டர்கள் தூரத்தில் காணமல் போன படகு கண்டுபிடிக்கப்பட்டது. படகில் இருந்த அனைவரும் பத்திரமாக இருந்தது கண்டறியப்பட்டது.

கடலோர காவல் படையின் கப்பல்களான ஐசிஜி டோர்னியர் மற்றும் ஐசிஜி விக்ரம் உள்ளிட்டவை தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1715391

-----

 



(Release ID: 1715446) Visitor Counter : 178