தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

இஸ்ரோ மற்றும் தொலைதொடர்பு தொழில்துறையுடன் இணைந்து தொலைதொடர்பு துறைக்கான வாய்ப்புகள் குறித்த இணைய கருத்தரங்கை என் டி ஐ பி ஆர் ஐ டி நடத்தியது

Posted On: 28 APR 2021 7:10PM by PIB Chennai

இந்திய அரசின் தொலைதொடர்பு துறையின் தலைமை பயிற்சி நிறுவனமான கொள்கை ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் பயிற்சிக்கான தேசிய தொலைதொடர்பு நிறுவனம் (என் டி ஐ பி ஆர் ஐ டி), "நாவிக் - தொலைதொடர்பு துறைக்கான வாய்ப்புகள்" எனும் தலைப்பில் இணைய கருத்தரங்கு ஒன்றை 2021 ஏப்ரல் 28 அன்று நடத்தியது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மற்றும் தொலைதொடர்பு தொழில்துறையுடன் இணைந்து இந்த இணைய கருத்தரங்கை கொள்கை ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் பயிற்சிக்கான தேசிய தொலைதொடர்பு நிறுவனம் நடத்தியது.

மத்திய தொலைதொடர்பு செயலாளர் மற்றும் டிஜிட்டல் தொலைதொடர்பு ஆணைய தலைவரான திரு அன்ஷு பிரகாஷ் இணைய கருத்தரங்கை தொடங்கி வைத்தார். திரு கே ராம்சந்த், உறுப்பினர் (தொழில்நுட்பம்), டிஜிட்டல் தொலைதொடர்பு ஆணையம், இஸ்ரோ அறிவியல் செயலாளர் திரு ஆர் உமாமகேஸ்வரன் மற்றும் கொள்கை ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் பயிற்சிக்கான தேசிய தொலைதொடர்பு நிறுவன மூத்த துணை தலைமை இயக்குநர் திரு யூ கே ஶ்ரீ வத்சவா உள்ளிட்டோர் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தொழில்நுட்பத்தின் பலனை முழுவதும் அடைவதற்காக அதனை செயல்பாடுகளோடு இணைக்க வேண்டிய தேவை குறித்து இணைய கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசிய மத்திய தொலைதொடர்பு செயலாளர் மற்றும் டிஜிட்டல் தொலைதொடர்பு ஆணைய தலைவரான திரு அன்ஷு பிரகாஷ் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1714697

*****************



(Release ID: 1714711) Visitor Counter : 228


Read this release in: English , Urdu , Hindi , Marathi