சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

சட்டீஸ்கர் உயர்நீதிமன்ற நீதிபதி சரத் குமார் குப்தா பதவி விலகினார்

Posted On: 28 APR 2021 11:40AM by PIB Chennai

சட்டீஸ்கர் உயர்நீதிமன்ற நீதிபதி சரத்குமார் குப்தா, 2021 மார்ச் 31ம் தேதி முதல் பதவி விலகியுள்ளார்.  இது தொடர்பான அறிவிப்பை, மத்திய சட்டம்,  நீதி அமைச்சகத்தின் நீதித்துறை வெளியிட்டுள்ளது. 

நீதிபதி திரு சரத் குமார் குப்தா, பி.எஸ்சி., எல்எல்.பி, கடந்த 1985ம் ஆண்டு நீதித்துறையில் இணைந்தார். பல இடங்களில் அவர் நீதித்துறை அதிகாரியாக பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். அவர் சட்டீஸ்கர்  உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக கடந்த 2017ம் ஆண்டு நியமிக்கப்பட்டார் மற்றும் நிரந்தர நீதிபதியாக கடந்த 2019ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1714515

 

******

 

(Release ID: 1714515)


(Release ID: 1714575) Visitor Counter : 171


Read this release in: English , Urdu , Hindi , Bengali