சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக திரு ராஜேஷ் பிந்தால் நியமனம்

Posted On: 27 APR 2021 12:07PM by PIB Chennai

கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த திரு தோத்தாதில் பாஸ்கரன் நாயர் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி திரு ராஜேஷ் பிந்தால் தலைமை நீதிபதியாக 2021 ஏப்ரல் 29ம் தேதி முதல் பணியாற்ற குடியரசுத் தலைவர், அரசியல் சாசனத்தின் 223 வது பிரிவின் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி நியமனம் செய்துள்ளார்

இது தொடர்பான அறிவிப்பை மத்திய சட்ட அமைச்சகத்தின் நீதித்துறை இன்று வெளியிட்டுள்ளது.

நீதிபதி திரு ராஜேஷ் பிந்தால், பி.காம். எல்எல்.பி கடந்த 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி வழக்கறிஞராக பதிவு செய்தார். பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம், மத்திய நிர்வாக தீர்ப்பாயம், வரிவிதிப்பு, அரசியல் சாசனம், சிவில் மற்றும் அரசு வழக்குகளில் இவர் வழக்கறிஞராக பணியாற்றினார். வரிவிதிப்பு விஷயங்களில் இவர் நிபுணத்துவம் பெற்றவர்.

வருமானவரித்துறை மற்றும் மத்திய, மாநில அரசு அமைப்புகளில் இவர் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். கடந்த 2006ம் ஆண்டு மார்ச் 22ம் தேதி இவர் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்கடந்த 2018ம் ஆண்டு இவர் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களின் பொது நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார்

கடந்த 2020ம் ஆண்டு  அதே நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்கடந்த ஜனவரி மாதம் இவர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார்.

                                                                                                                                    ----


(Release ID: 1714361) Visitor Counter : 207


Read this release in: English , Urdu , Hindi