அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

உருமாற்றங்களுடன் கூடிய கொரோனா தொற்று குறித்து உயிரி தொழில்நுட்பத் துறையின் இணைய கருத்தரங்கம்

Posted On: 24 APR 2021 9:20AM by PIB Chennai

தற்போதைய பெருந்தொற்று சூழ்நிலையில் உருமாற்றங்களுடன் கூடிய கொரோனா தொற்று மற்றும் அது குறித்த பொது சுகாதாரம் சம்பந்தமான புரிதலை மேம்படுத்துவதற்காகஉருமாற்றங்களுடன் கூடிய கொரோனா தொற்றுஎன்ற தலைப்பில் உயிரி தொழில்நுட்பத் துறை, நேற்று பொது இணைய கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த உருமாற்றங்களுடன் கூடிய தொற்றின் பின்னணியில் உள்ள அறிவியல் உண்மைகளை எடுத்துரைப்பது, இதன் காரணமாக பொது சுகாதாரத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்ற பல்வேறு  நோக்கங்களோடு இந்தக் கருத்தரங்கு நடத்தப்பட்டது.

உருமாற்றத்துடன்  கூடிய கொரோனா தொற்றின் முக்கியத்துவம், மாறுபட்ட தொற்றை கண்டறிவதில் மரபியலுக்கான இந்திய கொரோனா கூட்டமைப்பின் (INSACOG) பணி, உள்ளிட்டவை குறித்து பல்வேறு பிரபல நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த நிபுணர்கள் குழுவினர்  விளக்கமளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் உயிரி தொழில்நுட்பத் துறையின் செயலாளர் டாக்டர் ரேணு ஸ்வரூப் மற்றும் விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1713704

                                                                                                                                         ------



(Release ID: 1713742) Visitor Counter : 201


Read this release in: Urdu , English , Hindi , Bengali