குடியரசுத் தலைவர் செயலகம்
குடியரசுத் தலைவரின் ராம நவமி வாழ்த்துகள்
प्रविष्टि तिथि:
20 APR 2021 6:37PM by PIB Chennai
ராம நவமியை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
"ராமநவமி புனித நன்னாளை முன்னிட்டு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளை அனைத்து சக குடிமக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
பகவான் ஸ்ரீ ராமரின் பிறந்தநாள் ராம நவமியாக பக்திப் பெருக்குடன் கொண்டாடப்படுகிறது. நீதி மற்றும் மனித மாண்புக்காக நாம் பாடுபட்டுக் கொண்டிருக்கையில், மரியாதை புருஷோத்தமரான ஸ்ரீ ராமரின் கொள்கைகளில் இருந்து பெரும் ஆதரவை நாம் பெறுகிறோம். நல்லொழுக்கமான வாழ்வை வாழ்வது எப்படி என்று பகவான் ஸ்ரீ ராமர் நமக்கு கற்றுக் கொடுத்துள்ளார். அவரது ஒட்டுமொத்த வாழ்வும் மற்றும் நேர்மை, உண்மை மற்றும் கருணை குறித்த அவரது உபதேசங்களும் நமக்கு தொடர்ந்து ஊக்கம் அளிக்கின்றன.
இந்த நன்னாளில், பகவான் ராமரின் லட்சியங்களை நமது வாழ்வில் செயல்படுத்தவும் ஒளிமயமான இந்தியாவை கட்டமைக்க ஒன்றுபட்ட முயற்சிகளை எடுக்கவும் நாம் உறுதி ஏற்போம்."
குடியரசுத் தலைவரின் வாழ்த்துச் செய்தியை இந்தியில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
*****************
(रिलीज़ आईडी: 1713050)
आगंतुक पटल : 199