வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
2021, மார்ச் மாத மொத்த விலை குறியீட்டு எண்கள் வெளியீடு
प्रविष्टि तिथि:
15 APR 2021 12:03PM by PIB Chennai
2021, மார்ச் மாதத்துக்கான (தற்காலிக) மொத்த விலை குறியீட்டு எண்களை தொழில் வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறையின் பொருளாதார ஆலோசகர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
2020 மார்ச்சுடன் ஒப்பிடும் போது, 2021 மார்ச் மாதத்துக்கான வருடாந்திர பணவீக்கம் 7.39 சதவீதமாக (தற்காலிகம்) இருந்தது. ஆனால், 2021 பிப்ரவரியுடன் ஒப்பிடும் போது 1.57 சதவீதமாக பணவீக்க விகிதம் இருந்தது.
2020-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 2021 மார்ச்சில் கச்சா எண்ணெய், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் அடிப்படை உலோகத்தின் விலைகள் கணிசமாக அதிகரித்திருந்தன. மேலும், பொது ஊரடங்கின் காரணமாக, 2020 மார்ச் மாதத்திற்கான மொத்த விலை குறியீடு குறைவான உள்ளீடுகளுடனே கணக்கிடப்பட்டிருந்தது.
2021 பிப்ரவரியுடன் ஒப்பிடும் போது, தாதுக்களின் விலைகள் 0.35 சதவீதமும், கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயுவின் விலைகள் 8.64 சதவீதமும், உணவு சாரா பொருட்களின் விலைகள் 1.90 சதவீதமும் 2021 மார்ச்சில் அதிகரித்தன. உணவுப் பொருட்களின் விலைகள் 0.45 சதவீதம் குறைந்தன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1711946
------
(रिलीज़ आईडी: 1712024)
आगंतुक पटल : 255