புவி அறிவியல் அமைச்சகம்
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இன்று முதல் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
प्रविष्टि तिथि:
15 APR 2021 12:01PM by PIB Chennai
இந்திய வானிலை துறையின், தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் வெளியிட்ட தகவலில் கூறியிருப்பதாவது:
ஏப்ரல் 15ம் தேதியான இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பலத்த காற்று, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இதேபோல் நாட்டின் இதர மாநிலங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
ஏப்ரல் 16 மற்றும் 17-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ஏப்ரல் 18 மற்றும் 19ம் தேதிகளில், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்புள்ளது.
இதே போல் நாட்டின் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக, தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1711947
-------
(रिलीज़ आईडी: 1712001)
आगंतुक पटल : 199