மத்திய பணியாளர் தேர்வாணையம்

பொறியியல் சேவைகள் தேர்வு, 2020-ன் இறுதி முடிவுகள்

Posted On: 12 APR 2021 6:26PM by PIB Chennai

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2020 அக்டோபரில் நடத்திய பொறியியல் சேவைகள் தேர்வு, 2020-ன் எழுத்துப் பகுதி மற்றும் மார்ச்-ஏப்ரல் 2021-ல் நடைபெற்ற ஆளுமை தேர்வு ஆகியவற்றின் முடிவுகளின் அடிப்படையில், அமைச்சகங்கள்/துறைகளில் பல்வேறு சேவைகள்/பதவிகளுக்கு நியமிக்கப்படுவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள தேர்வர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சிவில் பொறியியல் பதவிகளுக்கு 127 பேரும், இயந்திர பொறியியலுக்கு 38 நபர்களும், மின்சார பொறியியலுக்கு 62 பேரும், மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு பொறியியலுக்கு 75 நபர்களும் என மொத்தம் 302 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பொதுப்பிரிவில் இருந்து 90 பேரும், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவில் இருந்து 35 நபர்களும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் இருந்து 100 பேரும், பட்டியல் பிரிவில் இருந்து 53 நபர்களும், பட்டியல் பழங்குடியினர் பிரிவில் இருந்து 24 நபர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

விதிகள் மற்றும் காலியிடங்களின் அடிப்படையில் பணி நியமனங்கள் செய்யப்படும். பல்வேறு சேவைகள்/பதவிகளுக்கான தேர்வர்களின் ஒதுக்கீடு அவர்களின் மதிப்பெண்கள் மற்றும் விருப்பங்களின் அடிப்படையில் செய்யப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1711194

*****************(Release ID: 1711209) Visitor Counter : 11