புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்

2021 பிப்ரவரி மாதத்திற்கான தொழில்துறை உற்பத்தி மற்றும் பயன்பாடு அடிப்படையிலான குறியீடுகளின் விரைவான மதிப்பீடுகள் (அடிப்படை 2011-12=100)

Posted On: 12 APR 2021 5:30PM by PIB Chennai

1. தொழில்துறை உற்பத்தி குறியீட்டின் விரைவான மதிப்பீடுகள் (ஐஐபி) ஒவ்வொரு மாதமும் 12 ஆம் தேதி (அல்லது 12 ஆம் நாள் விடுமுறை என்றால் அதற்கு முந்தைய  வேலை நாள் ) ஆறு வாரங்கள் தாமதித்து வெளியிடப்படுகிறது மற்றும் முகமைகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகளுடன் தொகுக்கப்படுகிறது. 

இந்த முகமைகள்  உற்பத்தி தொழிற்சாலைகள்/நிறுவனங்களிடமிருந்து தகவல்களை பெறுகின்றன.

2. 2021 பிப்ரவரி மாதத்துக்கான தொழிற்துறை உற்பத்தி குறியீட்டின் விரைவு மதிப்பீடு, 2011-12 அடிப்படையுடன் 129.4 புள்ளியாக உள்ளது. சுரங்கம், உற்பத்தி மற்றும் மின்துறைகளுக்கான உற்பத்தி குறியீடுகள் முறையே 116.5, 129.3 மற்றும் 153.9 புள்ளிகளாக உள்ளன. இந்த விரைவு மதிப்பீடுகள், தொழில்துறை உற்பத்தி குறியீட்டு திருத்த கொள்கையின்படி அடுத்தடுத்த வெளியீடுகளின் மாற்றத்துக்கு உட்படும்.

3. பயன்பாடு அடிப்படையிலான வகைப்பாட்டின்படி, 2021 பிப்ரவரி  மாதத்துக்கான முதன்மை பொருட்களுக்கான புள்ளிகள் 124.3 ஆகவும், மூலதன பொருட்களுக்கான புள்ளிகள் 93.3 ஆகவும், நடுத்தர பொருட்களுக்கான புள்ளிகள் 137.6 ஆகவும், உள்கட்டமைப்பு/கட்டுமான பொருட்களுக்கான புள்ளிகள் 138.2 ஆகவும் உள்ளன.  மேலும், நுகர்வோர் பயன்படுத்தும் நீடித்த பொருட்களுக்கான புள்ளிகள், குறுகிய கால பயன்பாட்டு பொருட்களுக்கான புள்ளிகள் முறையே 124.7 மற்றும் 147.6 ஆகவும் உள்ளன.

4. 2021 பிப்ரவரி மாதத்துக்கான தொழில் உற்பத்தி குறியீட்டின் விரைவு மதிப்பீடுகள் துறைவாரியான, டிஜிட்டல் அளவிலான, பயன்பாடு அளவிலான வகைப்பாட்டின் அறிக்கைகள் கீழ்கண்ட இணைப்பில் வழங்கப்பட்டுள்ளன. 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1711172

இந்த பத்திரிக்கை குறிப்பின் முழு விவரம், புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்கத்தின் இணையதளத்தில் http://www.mospi.nic.in வெளியிடப்பட்டுள்ளது.

2021மார்ச் மாதத்துக்கான தொழிற்துறை உற்பத்தி குறியீடு வரும் மே 12ம் தேதி வெளியிடப்படும்.

*****************



(Release ID: 1711205) Visitor Counter : 174


Read this release in: English , Urdu , Hindi , Punjabi