அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
கொரோனா மரபியல் கூட்டமைப்பு
Posted On:
19 MAR 2021 5:17PM by PIB Chennai
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
இந்தியாவில் கொரோனா மரபியல் கண்காணிப்புக்காக, கொரோனா மரபியல் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த கூட்டமைப்பில் என்ஐபிஎம்ஜி கல்யாணி, ஐஎல்எஸ் புவனேஸ்வர், ஐசிஎம்ஆர்-என்ஐவி புனே, என்சிசிஎஸ் புனே, சிஎஸ்ஐஆர்-சிசிஎம்பி ஹைதராபாத், சிடிஎஃப்டி ஹைதராபாத், இன்ஸ்டெம் / என்சிபிஎஸ் பெங்களூரு, நிம்ஹான்ஸ் பெங்களூரு, சி.எஸ்.ஐ.ஆர்-ஐ.ஜி.ஐ.பி தில்லி, மற்றும் என்.சி.டி.சி தில்லி ஆகிய பெயர்களில் 10 மண்டல மரபியல் பரிசோதனைக் கூடங்கள் உள்ளன.
இந்த மண்டல மரபியல் பரிசோதனை கூடங்கள், தங்கள் நிதியை பயன்படுத்தி கூட்டமைப்பின் செயல்பாடுகளை மேற்கொள்கின்றன. இவற்றுக்கு நிதி வழங்கும் திட்டம், உயிரி தொழில்நுட்ப துறையின் நிதி மதிப்பீடு செயல்முறை திட்டத்தின் கீழ் உள்ளது.
புதிய கொரோனா வைரஸின் தற்போதைய நிலவரத்தை உறுதி செய்யவும், மரபியல் மாறுபாடுகளை முன்கூட்டியே கண்டறிந்து கண்காணிக்கவும், வழக்கத்துக்கு மாறான சம்பவங்களில், மரபியல் மாற்றத்தை உறுதி செய்யவும், இந்திய கொரோனா மரபியல் கூட்டமைப்பில் 10 பரிசோதனை கூடங்கள் உள்ளன.
கொரோனா வைரஸின் புதிய உருமாற்றத்தை கண்டறிய, ஆரம்பத்தில், ஒவ்வொரு மாநிலத்திலிருந்து 5 சதவீத கொவிட் வைரஸ் மாதிரிகளை மட்டுமே பரிசோதிக்க திட்டமிடப்பட்டது. 2021 மார்ச் 10ம் தேதி வரை, பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து பெறப்பட்ட மொத்தம் 19,092 தொற்று உறுதி செய்யப்பட்ட ஆர்டி-பிசிஆர் மாதிரிகள், 10 மண்டல பரிசோதனை கூடங்களில் பெறப்பட்டன.
இவற்றில் 4869 மாதிரிகளை பரிசோதனை செய்ததில், 284 மாதிரிகள் இங்கிலாந்தில் ஏற்பட்ட கொரோனா வகையைச் சேர்ந்தது என்றும், 11 மாதிரிகள் தென் ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட கொரோனா வகை என்றும், ஒன்று பிரேசிலில் ஏற்பட்ட கொரோனா வகை என்றும் கண்டறியப்பட்டது.
கொரோனா மரபியல் கூட்டமைப்பு தொடங்கப்பட்டதில் இருந்து மாநிலம் வாரியாக பெறப்பட்ட கொரோனா மாதிரிகளின் விவரம் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1706087
-----
(Release ID: 1706127)
Visitor Counter : 204