குடியரசுத் தலைவர் செயலகம்

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், குடியரசுத் தலைவர் திரு.ராம் நாத் கோவிந்த் ஆற்றிய உரையின் சிறப்பம்சங்கள்

Posted On: 11 MAR 2021 2:15PM by PIB Chennai

வணக்கம் !

 

1.       இந்த மதிப்புமிக்க பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் உங்களைப்போன்ற உற்சாகமான மாணவர்களிடையே இருப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்இன்று பட்டம் பெற்ற எனது இளம் நண்பர்களுக்கு, குறிப்பாக அவர்களின் சிறப்பான செயல்திறன்  மற்றும் கல்வித் திறனுக்காக பதக்கங்களை வென்றவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

2.       அண்ணா பல்கலைக்கழகம் அமைந்துள்ள புண்ணிய பூமியான இந்த தமிழ்நாடு, பழங்காலம் முதல்  அறிவாற்றல் மற்றும் கற்றலில் தலைசிறந்து விளங்குகிறதுசங்ககால இலக்கியம் முதற்கொண்டு, பல நூற்றாண்டு கால இலக்கிய பாரம்பரியம், இந்தியர்கள் அனைவருக்கும் பெருமிதம் அளிக்கக் கூடியதாகும்ஏனெனில், இது நம் நாட்டின் கலாச்சாரப் பாரம்பரிய செழுமையை பறைசாற்றுவதாக உள்ளதுஇந்த (தமிழ்) இலக்கியத்தில் உள்ள பாடல்களின் செய்யுள் திரட்டுகள், உலகம் முழுவதும் உள்ள வாசகர்கள் மற்றும் அறிஞர்களால் பாராட்டப்படுகின்றனபண்டைக்கால இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள உரையின் தொன்மைகளைப் பார்ப்போமேயானால்தமிழ் மொழிக்கு செம்மொழித் தகுதி வழங்கியதில் வியப்பு ஏதும் இல்லை.  

தாய்மார்களேபெரியோர்களே,

3.       அறிவாற்றல் தான் சொத்து, இதுவே அனைத்து சொத்துக்களிலும்  தலைசிறந்தது ஆகும்இது தான் திருடர்களால் கொள்ளையடிக்க முடியாதது, மன்னர்களால் பறிக்க முடியாததுசகோதரர்கள் பங்கு போட முடியாதது என்பதோடு, எடுத்துச் செல்வதற்கும் எளிதானது என்று பழமொழிகள் கூறுகின்றன. ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் மென்மேலும் பெருகக்கூடிய, செழித்து வளரக்கூடியது அறிவாற்றலே.   எனவே, அறிவாற்றல் சொத்து, அனைத்து வகையான சொத்துக்களிலும் மிக முக்கியமான சொத்து ஆகும்.  

4.       ஒவ்வொரு தனிநபரின் பண்புகளை உருவாக்குவதில், அறிவாற்றலே அடித்தளமாகத் திகழ்கிறது.   நான் ஏற்கனவே கூறியதைப் போன்று, மாற்றத்திற்கான கிரியா ஊக்கி கல்வி தான் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புவதோடு, சமூக மாற்றத்திற்கான மிக முக்கியத் தூதர்கள் இளைஞர்கள் தான் என்பதையும் நினைவுகூர்கிறேன்.   கற்றறிந்த இளைஞர்களுக்கு சரியான திசையைக் காட்டினால்அவர்களால்நாட்டின் வரலாற்றில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.  

5.       இதனை அடைவதுதான் தேசிய கல்விக் கொள்கை-2020ன் நோக்கமாகும்நாட்டின் தற்போதைய கல்வி முறை மற்றும் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது குறித்து, மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் துணைவேந்தர்கள் மற்றும் அறிஞர்களோடு விவாதிக்கும் வாய்ப்பு, கடந்த ஆண்டு எனக்கு கிடைத்ததுதற்காலத்தில் உருவாகும் தேவைகளுக்கேற்ற அறிவாற்றல் மற்றும் திறன், ஆராய்ச்சி அடிப்படையிலான நவீன கல்வி முறையை நடைமுறைப்படுத்துவதற்காகத்தான் புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது.   அதேவேளையில், எதிர்காலத்திற்கேற்ற கண்ணோட்டத்தின் அடிப்படையில், நமது கலாச்சார பாரம்பரிய செழுமையை உள்ளடக்கியதாகவும் இது(கல்விக் கொள்கை) இருக்க வேண்டும்.   இந்தக் கொள்கை, நற்பண்புகளை போதிப்பதாகவும்இந்தியக் கலாச்சாரத்தைப் பற்றிய புரிதலை மேம்படுத்துவதாகவும் இருப்பது அவசியம்.   புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும்போதுநவீன கற்றல் மற்றும் கல்விமுறையில் அடியெடுத்து வைக்க முடியும் என்று நான் நம்புகிறேன்அப்படி செய்தால்ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வல்லுனர்கள் அடங்கிய பெரும் படையை உருவாக்க முடியும் என்பதோடு, அவர்கள் தேசத்தின் எதிர்பார்ப்புகளுக்கேற்பநம் நாட்டை வளர்ச்சியின் உச்சத்திற்கு அழைத்துச் செல்வார்கள்.  

6.       இன்று நான் நின்றுகொண்டிருக்கும் இந்தப் பல்கலைக்கழகம், மாபெரும் தொழில்நுட்பக் கல்வி மையமாகத் திகழ்கிறது என்பதை அறியும்போதுமிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.   இந்த பல்கலைக்கழகம், பொறியியல், தொழில்நுட்பம், கட்டிடக் கலை மற்றும் தற்கால மற்றும் சமுதாயத்தின் தேவைகளுக்கேற்ற பயன்பாட்டு அறிவியலில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளை வழங்கி வரும் உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களில் ஒன்றாகத் திகழ்கிறதுஇந்த பல்கலைக்கழகத்தின் மிகவும் பழமையான கல்லூரி, 1794-ம் ஆண்டில், கோடை காலமான மே மாதத்தில், நில அளவியல் பள்ளி என்ற அளவில், சாதாரணமாகத் தொடங்கப்பட்டது என்று என்னிடம் தெரிவித்தனர்பின்வந்த ஆண்டுகளில், இது பிரசித்திபெற்ற கிண்டி பொறியியல் கல்லூரியாக உருவாகி, அதன் 225-வது ஆண்டு விழா, கடந்த ஆண்டு கொண்டாடப்பட்டுள்ளது.   அந்த தொடக்க காலத்திலிருந்தே படிப்படியாக வளர்ந்து, பல்கலைக்கழகத்தின் துறைசார்ந்த நான்கு வளாகங்கள், 13 உறுப்புக் கல்லூரிகள், திருநெல்வேலி, மதுரை மற்றும்  கோயம்புத்தூர் ஆகிய 3 இடங்களில் மண்டல வளாகங்களையும்,  500-க்கும் மேற்பட்ட இணைப்புக் கல்லூரிகளையும் கொண்ட தலைசிறந்த கல்வி நிறுவனங்களின் தொகுப்பாகத் திகழ்கிறது.   எண்ணிக்கையில் மட்டுமின்றி, தரத்திலும் சிறந்து விளங்கும் அண்ணா பல்கலைக்கழகம், கல்வித் துறையில் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளது.   இதனால் தான்,  QS  உலக மற்றும் என்ஐஆர்எப் தரவரிசைப் பட்டியலில், மிகச் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக இந்த நிறுவனம் இடம்பெற்றுள்ளது.  

7.       கடந்த  பல ஆண்டுகளில், மாணவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்துள்ளது.   இந்த பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது, கல்வி மூலம் பாலின அதிகாரமளிப்பதாக இருப்பது மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளதுஇன்று, இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி முனைவர் அளவில் பட்டங்களைப் பெறும் ஒரு லட்சம் பேரில், சுமார் 45 சதவீதத்தினர் பெண்கள் என்று என்னிடம் தெரிவித்தனர்.   இன்று தங்கப்பதக்கம் பெற்றவர்கள் மற்றும் முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்து பட்டம் பெற்றவர்களில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் பெண்கள் என்பது, மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறதுதங்கப்பதக்கம் பெற்ற 66 பேரில் 42 பேர் நமது புதல்விகள் என்று என்னிடம் கூறினார்கள். மேலும், நான் தங்கப் பதக்கம் வழங்கிய 13 மாணாக்கர்களில் 9 பேர் மாணவிகள் என்பதை கவனித்தேன். நமது சமுதாயத்தில், நமது மகள்கள் தலைமைத்துவத்தை முன்னெடுப்பதை இது காட்டுகிறது. பெண்கள் வெளிப்படுத்தியுள்ள இந்த உயர்சிறப்பு, எதிர்காலத்தில் இந்தியா வளர்ந்த நாடாக உருவாகும் என்பதை பிரதிபலிப்பதாக உள்ளதுஇத்தகைய சிறப்புக்குரிய மாணவிகள் ஒவ்வொருவரையும் நான் மனதார வாழ்த்துவதோடு, இது உங்களின் கல்வி மற்றும் தனிப்பட்ட முன்னேற்றத்திற்கான முதல் படிக்கல் என்பதை நினைவுகூர விரும்புகிறேன்

8.       இளம் மாணவர்களிடையே சரியான கற்றல் போக்கைப் பயிற்றுவிக்கக் கூடிய, தொழில்நுட்ப முன்முயற்சிகளை ஊக்குவிப்பதற்கு உகந்த சூழலை அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது.   இந்த பல்கலைக்கழகத்தின் சாதனைகள் மற்றும் திட்டங்கள், மாணவர்களிடையே அறிவியல் திறன் ஏற்படுத்தப்பட்டிருப்பதை எடுத்துரைப்பதாக உள்ளது.   இஸ்ரோவுடன் இணைந்து செயற்கைக்கோளை வடிவமைத்துத் தயாரித்து, அதனை இயக்கிவரும் இந்தியாவின் முதலாவது பல்கலைக்கழகம் இந்த பல்கலைக்கழகம் என்பதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.   அணுசாட் என்ற பெயரிடப்பட்ட செயற்கைக்கோள், ஒரு சாதனை என்பதோடு மட்டுமின்றிஉலகெங்கிலும் உள்ள இளைஞர்களின் மனதில் விண்வெளி ஆராய்ச்சிக்கு வித்திடுவதில் பெரும் ஊக்கமளிப்பதாகவும் இருக்கும்.  

தாய்மார்களே, பெரியோர்களே

9.       எனக்கு முன்பு குடியரசுத் தலைவராக இருந்தவரும், இந்த பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவருமான பாரத் ரத்னா டாக்டர் .பி.ஜெ.அப்துல் கலாம் பயின்ற அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வந்திருப்பது எனக்கு மிகுந்த பெருமிதம் அளிக்கிறது.   அவரது பெயரில் விருது ஒன்றை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியிருப்பது பாராட்டிற்குரியதுகூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்கள் மூலம், பெரும் சமூக மாற்றத்திற்கு வித்திட்ட டாக்டர் வர்கீஸ் குரியன் போன்ற தலைசிறந்த நபர்களை இந்த பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது.   அவரது முயற்சிகள் வெண்மைப் புரட்சிக்கு வழிவகுத்தது.   தற்கால இந்தியாவின் தலையாய சமூக தொழில்முனைவோரில் எப்போதும் நினைவுகூரத்தக்கவர் டாக்டர் குரியன்.   அவரைப் போன்ற, இந்த பல்கலைக்கழகத்தின் தலைசிறந்த முன்னாள் மாணவர்கள், உங்களுக்கு (அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு) மட்டுமின்றி, உலகெங்கிலும் உள்ள மாணவர்கள் அனைவருக்கும் ஊக்கமளிக்கக் கூடிய உந்துசக்தியாகத் திகழ்வார்கள்

10.     இந்தியாவில் உள்ள நாம், அனைவருக்கும் பயனளிக்கக் கூறிய அறிவாற்றலை ஊக்குவிப்பதில் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறோம்மகாகவி சுப்ரமணிய பாரதி எழுதிய கீழ்க்காணும் கவிதையை நினைவுகூர நான் விரும்புகிறேன்:

பூரண ஞானம் பொலிந்த நன்னாடு

புத்தர்பிரா னருள் பொங்கிய நாடு

நம் இந்தியத் திருநாடு அறிவாற்றல் நிறைந்த நாடு,

கௌதம புத்தரின் கருணை தவழும் நாடு இது

என்பது அதன் பொருளாகும்.  

11.     அறிவாற்றலுடன் இணைந்த கருணையானதுஒரு நாடு முன்னேற்றப் பாதையில் பீடுநடை போட உதவுவதோடு, பிறர் நலன் பேணும் கலாச்சாரத்தையும் ஊக்குவிக்கும்இன்று பட்டம் பெறும் மாணவர்கள் அனைவரும், அவர்களது வாழ்க்கையில் இதே பாதையைப் பின்பற்றி முன்னேறுவதோடு, அவர்களது முன்னோர் மற்றும் நம் நாட்டிற்கு பெருமிதம் தேடித் தருவார்கள் என்ற நம்பிக்கை  எனக்குள்ளது.  

12.     எனது அருமை இளம் நண்பர்கள், வாழ்க்கையில் புதிய பயணத்தைத் தொடங்குவதற்கான நுழைவாயிலில் உள்ளனர்உங்களில் சிலர், உயர்கல்வியைத் தொடரக்கூடும், மற்றவர்கள்  பணிப் பொறுப்புகளை ஏற்கக் கூடும்ஆனால்செயல்பாடுகள் தான் உங்களது தனித்துவத்தை வெளிப்படுத்தும் என்பதை, எப்போதும் மனதிற்கொள்ள வேண்டும்உங்களை வளர்த்தெடுத்து ஆளாக்கி, வாழ்க்கையின் முக்கியமான கட்டத்திற்கு அழைத்து வந்துள்ள உங்களது குடும்பம், சமுதாயம் மற்றும் இந்த நாட்டிற்கு நன்றிக்கடன்பட்டவர்களாக எப்போதும் இருக்க வேண்டும்சிறந்த ஆற்றலை வெளிப்படுத்தும் முயற்சியை நீங்கள் ஒருபோதும் விட்டுவிட மாட்டீர்கள் என்பது எனது உறுதியான நம்பிக்கையாக உள்ளது.

13.     மாணவர்களுக்கு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்மாணவர்களின் வாழ்க்கைப் பயணத்தில் அவர்களை இந்த நிலைக்குக் கொண்டுவந்துள்ள அவர்களது குடும்பத்தினரையும் நான் பாராட்டுகிறேன்.   இந்தத் தருணத்தில், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினரையும் நான் பாராட்டுகிறேன்.  

நன்றி,

ஜெய் ஹிந்த்!

*****


(Release ID: 1704112) Visitor Counter : 286


Read this release in: English , Urdu , Hindi , Punjabi