பாதுகாப்பு அமைச்சகம்

கடற்படை கிழக்கு மண்டல தலைமை அதிகாரியாக வைஸ் அட்மிரல் அஜேந்திர பகதூர் சிங் பொறுப்பேற்பு

Posted On: 01 MAR 2021 5:05PM by PIB Chennai

கடற்படை கிழக்கு மண்டல தலைமை அதிகாரி பொறுப்பை வைஸ் அட்மிரல் அதுல் குமார் ஜெயினிடமிருந்து, வைஸ் அட்மிரல் அஜேந்திர பகதூர் சிங் இன்று ஏற்றுக் கொண்டார்.

கிழக்கு மண்டல கடற்படை தளத்தில் நடந்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட வைஸ் அட்மிரல் அஜேந்திர பகதூர் சிங், கிழக்கு மண்டல கடற்படையின் பல பிரிவுகளையும் ஆய்வு செய்தார். இதில் கடற்படை உயர் அதிகாரிகள், போர்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களின்  தலைமை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

பின்னர் விசாகப்பட்டினம் கடற்கரை சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில், அட்மிரல் அஜேந்திர பகதூர் சிங், மலர் வளையம் வைத்து, வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு மரியாதை  செலுத்தினார். 

இவர் கடற்படையில் 1983ம் ஆண்டு சேர்ந்தார். நேவிகேஷன் நிபுணரான இவர், கடற்படையில் கடந்த 38 ஆண்டு காலமாக பல பதவிகளை வகித்துள்ளார்.

ஐஎன்எஸ் விராட், வீர், விந்தயகிரி, திரிசூல் போன்ற கடற்படை கப்பல்களில் தலைமை அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.

 

கடற்படையில் இவரது சிறந்த சேவையைப் பாராட்டி கடந்த 2011ம் ஆண்டு விசிஷ்ட் சேவா பதக்கமும், கடந்த 2016ம் ஆண்டு அதி விசிஷ்ட் சேவா பதக்கமும் வழங்கப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1701715

-------

 


(Release ID: 1701750) Visitor Counter : 244


Read this release in: English , Urdu , Hindi