நிதி அமைச்சகம்
அரசுத் துறைகளின் பரிவர்த்தனைகளை தனியார் வங்கிகள் கையாள்வதற்கான தடை நீக்கம்
Posted On:
24 FEB 2021 5:10PM by PIB Chennai
வரிகள், இதர வருவாய் கட்டண வசதிகள், ஓய்வூதியம், சிறு சேமிப்பு திட்டங்கள் போன்ற அரசு தொடர்பான வங்கி பரிவர்த்தனைகளை தனியார் வங்கிகள் (ஒரு சில வங்கிகளுக்கு முன்பு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது) கையாள்வதற்கான தடையை அரசு நீக்கியுள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் வாடிக்கையளர்களுக்கான வசதிகள் அதிகரித்து, போட்டித்தன்மை உருவாகி, வாடிக்கையாளர் சேவைகளின் தரம் மேம்படும்.
சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளை வங்கியியலில் புகுத்தி பின்பற்றுவதில், முன்னணியில் இருக்கும் தனியார் வங்கிகள், இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியிலும், அரசின் சமூகநலத் துறை திட்டங்களை மேம்படுத்துவதிலும் இனி சமமான பங்குதாரர்களாக இருப்பார்கள்.
இந்தத் தடை நீக்கப்பட்டிருப்பதன் மூலம், அரசு முகமை வர்த்தகம் உட்பட அரசு வர்த்தகத்தை தனியார் வங்கிகள் (பொதுத்துறை வங்கிகளையும் சேர்த்து) செய்வதற்கான ரிசர்வ் வங்கியின் ஒப்புதலுக்கு தடையேதும் இல்லை. இம்முடிவை ரிசர்வ் வங்கிக்கு அரசு தெரிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1700463
----
(Release ID: 1700601)
Visitor Counter : 196