அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

டி.என்.ஏ மாற்றங்களை அளவிட விஞ்ஞானிகள் புதிய நுட்பம் உருவாக்கம் : புற்றுநோய், அல்சைமர் மற்றும் பார்கின்சன் ஆகியவற்றை முன்கூட்டியே கண்டறிய உதவும்

Posted On: 24 FEB 2021 12:17PM by PIB Chennai

புற்றுநோய், ஞாபகமறதி நோய் (அல்சைமர்மற்றும் நடுக்க வாதம் (பார்கின்சன்) நோய்கள் போன்ற பல நோய்களை முன்கூட்டியே கண்டறிவதில் டி.என். மாற்றங்களை அளவிட விஞ்ஞானிகள் ஒரு புதிய நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.

டி.என்..வில் ஏற்படும் மாற்றம், அவற்றின் வெளிப்பாடு மற்றும் செயல்பாடுகளை பாதிக்கிறது. டி.என்.மரபணு குறியீட்டின் மூலமாகவும் அதன் கட்டமைப்பில் மாற்றங்கள் மூலமாகவும் உயிரணுக்களின் வாழ்வைக் கட்டுப்படுத்துகிறது.

டி.என். கட்டமைப்புகளின் இத்தகைய மாற்றங்களை அளவிடுவதற்கும், அரிய நோய்களைக் கண்டறியவும் அதனுடன் தொடர்புடைய மூலக்கூறு வழிமுறைகளைக் புரிந்து கொள்வதற்கு மிக உயர்ந்த தெளிவுத்திறன் கொண்ட நுட்பங்கள் தேவைப்படுகிறது.

விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ள  மிகச்சிறிய நுண்துளை அடிப்படையிலான  தொழில்நுட்பம் மூலம், அத்தகைய மாற்றங்களை அல்லது  டி.என்.. க்களின் பண்புகளை, ஒற்றை-மூலக்கூறு தெளிவுத்திறனுடன் நேரடியாக அளவிட முடியும்.

இந்த தொழில்நுட்பத்தை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் தன்னாட்சி மையமான ராமன் ஆராய்ச்சி மைய பேராசிரியர் கவுதம் சோனி தலைமையிலான விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

ஆராய்ச்சியாளர் சுமந்த் குமார், கவுசிக் மற்றும் டாக்டர் சோனி ஆகியோர் மேற்கொண்ட இந்த ஆய்வுநேனோஸ்கேல்என்ற இதழில் வெளியாகியுள்ளது.

இதை கீழ்கண்ட இணைப்பிலும் பார்க்கலாம்.

https://doi.org/10.1039/D0NR06219G

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1700369



(Release ID: 1700496) Visitor Counter : 177


Read this release in: English , Urdu , Hindi , Punjabi