அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
சுகாதாரத்தை மேம்படுத்தும் ஒட்டும் தன்மையிலான பாய்: விஞ்ஞானிகளின் புதிய தயாரிப்பு
Posted On:
23 FEB 2021 12:27PM by PIB Chennai
வீடுகள், அலுவலகங்கள், மருத்துவமனைகள், ஆய்வகங்களில் உள்ள தூசிகளை அகற்றி, சுகாதாரமான, ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்துவதற்காக ஒட்டும் தன்மையிலான பாய் போன்ற விரிப்பை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கான்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் ரசாயன பொறியியல் துறையின் பேராசிரியர் திரு அனிமங்சு கடக், இந்திய அரசின் அறிவியல், தொழில்நுட்பத் துறையின் ஆதரவுடன், மேக் இன் இந்தியா முன்முயற்சியின் கீழ் இந்த விரிப்பை கண்டுபிடித்துள்ளார்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்தத் தயாரிப்பு, குறைந்த விலையில் கிடைக்கும் வகையிலும், தண்ணீரினால் எளிதில் சுத்தம் செய்ய ஏதுவாகவும், பலமுறை பயன்படுத்தக்கூடிய தன்மையுடனும் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1700124
(Release ID: 1700124)
(Release ID: 1700336)
Visitor Counter : 168