இந்திய போட்டிகள் ஆணையம்

டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தை பனாடோன் ஃபின்வெஸ்ட் நிறுவனம் வாங்குவதற்கு சிசிஐ ஒப்புதல்

Posted On: 23 FEB 2021 11:25AM by PIB Chennai

டாடா கம்யூனிகேஷன்ஸ்  நிறுவனத்தை பனாடோன் ஃபின்வெஸ்ட் நிறுவனம் வாங்குவதற்கு இந்திய போட்டியியல் ஆணையகம் (சிசிஐ) இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

இந்திய போட்டியியல் சட்டம், 2002, 31(1)-வது பிரிவின் கீழ், டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் 26.12 சதவீத பங்குகளுக்கு மிகாமல் பனாடோன் ஃபின்வெஸ்ட் நிறுவனம் பெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி 48.87 சதவீதமாக உள்ள பனாடோன் நிறுவனத்தின் பங்குகளை 74.99 சதவீதத்திற்கு மிகாமல் உயர்த்துவதற்கு இந்த ஒப்புதல் வழிவகை செய்யும்.

இது தொடர்பான விரிவான ஆணையை சிசிஐ வெளியிட உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1700106

*****

 (Release ID: 1700106)


(Release ID: 1700170) Visitor Counter : 203