இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

மோட்டேரா விளையாட்டரங்கை 2021 பிப்ரவரி 24 அன்று மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா முன்னிலையில் குடியரசுத் தலைவர் திறந்து வைக்கிறார்

Posted On: 22 FEB 2021 5:40PM by PIB Chennai

இனி உலகின் மிகச்சிறந்த மற்றும் பெரிய கிரிக்கெட் மைதானம் உள்ள இடம் மெல்போர்ன் கிடையாது. நம் நாட்டின் அகமதாபாத்தின் சபர்மதியில் உள்ள மோட்டேரா விளையாட்டரங்கம் மெல்போர்னிடம் இருந்து அத்தகுதியை தட்டி பறித்துள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்கிடையே நடைபெறவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டிக்காக புதிய அம்சங்களுடனும், நவீன வசதிகளுடனும் மோட்டேரா அரங்கம் தயார்படுத்தப்பட்டுள்ளது.

மோட்டேரா விளையாட்டரங்கை 2021 பிப்ரவரி 24 அன்று மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷாவின் முன்னிலையில் குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கிறார்.

63 ஏக்கர்களில் பரந்து விரிந்துள்ள இந்த அரங்கத்தில் 1.10 லட்சம் ரசிகர்கள் கிரிக்கெட் போட்டிகளை கண்டு ரசிக்கலாம். ரூ 800 கோடி செலவில் லார்சன் அண்டு டூப்ரோ நிறுவனம் இவ்வரங்கத்தை கட்டி முடித்துள்ளது.

பழைய விளையாட்டரங்கம் 2016-ஆம் ஆண்டு இடிக்கப்பட்ட போது, 54,000 பேர் அமரும் வசதி அதில் இருந்தது. புதிய அரங்கத்திற்கான அடிக்கல் 2018-ம் ஆண்டு குஜராத் கிரிக்கெட் சங்கத்தால் நாட்டப்பட்டது.

பிரதமர் திரு. நரேந்திர மோடியின் கனவு திட்டமான மோட்டேரா விளையாட்டு அரங்கத்தில், 76 பெருநிறுவன அரங்குகள், ஒலிம்பிக் தரத்திலான நீச்சல்குளம், பயிற்சி மையம், விளையாட்டு வீரர்களுக்கான நான்கு உடைமாற்றும் அறைகள், உணவு சாலைகள், குஜராத் கிரிக்கெட் சங்க கிளப் ஹவுஸ் ஆகிய வசதிகள் உள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1699967
 



(Release ID: 1699999) Visitor Counter : 156


Read this release in: English , Hindi , Manipuri