தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
ஐந்து முக்கிய அகில இந்திய ஆய்வுகளை மேற்கொள்ளவிருக்கும் அதிகாரிகளுக்கு தொழிலாளர் வாரியம் பயிற்சி
Posted On:
22 FEB 2021 3:59PM by PIB Chennai
தொழிலாளர் வாரியத்தால் மேற்கொள்ளப்படும் புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றிய அகில இந்திய ஆய்வு, வீட்டு தொழிலாளர்கள் பற்றிய அகில இந்திய ஆய்வு, தொழில்முறையாளர்களால் உருவாக்கப்படும் வேலை வாய்ப்புகள் பற்றிய அகில இந்திய ஆய்வு, போக்குவரத்துத் துறையில் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகள் பற்றிய அகில இந்திய ஆய்வு, காலாண்டு நிறுவன அடிப்படையிலான அகில இந்திய வேலைவாய்ப்பு ஆய்வு ஆகிய அகில இந்திய ஆய்வுகள் தொடர்பாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சண்டிகரின் தொழிலாளர் வாரியம் 20-ஆம் தேதி பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
வல்லுநர் குழுவின் தலைவர் பேராசிரியர் எஸ் பி முகர்ஜி, உப தலைவர் டாக்டர் அமிதாப் குண்டு, தொழிலாளர் வாரிய தலைமை இயக்குநர் திரு. டிபிஎஸ் நெகி ஆகியோர் இந்த பயிற்சியை வழங்கினார்கள்.
தொழிலாளர் வாரியத்தைச் சேர்ந்த அதிகாரிகள்/ அலுவலர்கள், ஏழு மண்டல அலுவலகங்களைச் சேர்ந்த அதிகாரிகளும், பல்வேறு மாநில அரசுகளின் அலுவலர்களும் 3 நாட்கள் நடைபெறும் இந்த முகாமில் விரிவான பயிற்சியை மேற்கொள்வார்கள்.
நாடு முழுவதும் கள ஆய்வுகளை மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் பயிற்சிகளுக்கு முன்னோட்டமாக இந்த பயிற்சி முகாம் நடைபெற்றது.
இந்த பயிற்சி முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்த பணியாளர்களை திரு. டிபிஎஸ் நெகி பாராட்டியதுடன், இந்த ஐந்து முக்கிய ஆய்வுகளின் மூலம் திரட்டப்படும் தரவுகள் மற்றும் சான்றுகளை அடிப்படையாகக் கொண்ட விஷயங்கள், கொள்கைகளின் தயாரிப்பில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று குறிப்பிட்டார்.
வீட்டு தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் சம்பந்தமான தரவுகளில் நிலவிய இடைவெளியை பூர்த்தி செய்யவும் இந்த ஆய்வுகளின் மூலம் பெறப்படும் தகவல்கள் உதவிகரமாக இருக்கும் என்றார் அவர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1699928
(Release ID: 1699978)
Visitor Counter : 170