எரிசக்தி அமைச்சகம்

மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினராக மின்சாரத் துறை அமைச்சர் திரு ஆர் கே சிங் முன்னிலையில் திரு பிரவாஸ் குமார் சிங் பதவியேற்றார்

Posted On: 22 FEB 2021 2:56PM by PIB Chennai

மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினராக திரு. பிரவாஸ் குமார் சிங்கிற்கு மத்திய மின்சாரத் துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு ஆர் கே சிங் இன்று பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினராக 2020 டிசம்பர் 16-ம் தேதியிட்ட உத்தரவின் மூலம் திரு. பிரவாஸ் குமார் சிங் நியமிக்கப்பட்டார்.

 சட்டப்படிப்பு படித்துள்ள அவர், மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்படுவதற்கு முன்ஜார்க்கண்ட் மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினர் (சட்டம்) ஆக இருந்தார்.

மின்சார ஒழுங்குமுறை ஆணையகங்கள் சட்டம் 1998-ன் கீழ் மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தை இந்திய அரசு நிறுவியது. மின்சார ஒழுங்குமுறை ஆணையகங்கள் சட்டம் 1998- நீக்கிய மின்சார சட்டம் 2003-ன் நோக்கங்களுக்கான மத்திய ஆணையமாக மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உள்ளது. தலைவர், ஆணையத்தின் அமைப்புசாரா உறுப்பினரான மத்திய மின்சார ஆணையம் உட்பட தலைவர் மற்றும் நான்கு இதர உறுப்பினர்களைக் கொண்டதாக இந்த ஆணையம் அமைந்துள்ளது.

மின்சார சட்டத்தின் படி, தேசிய மின்சாரக் கொள்கை, கட்டணக் கொள்கை ஆகியவற்றை வகுத்தல், மின்சாரத் துறையில் போட்டி, செயல்திறன் மற்றும் பொருளாதாரத்தை ஊக்குவித்தல், மின்சாரத் துறையில் முதலீடுகளை ஊக்குவித்தல் மற்றும் மத்திய ஆணையம் தொடர்பான இதர விஷயங்களில் மத்திய அரசுக்கு மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஆலோசனைகள் வழங்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1699910


(Release ID: 1699951) Visitor Counter : 324


Read this release in: Hindi , English , Urdu , Punjabi