சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்

நாடு முழுவதும் உள்ள கலைஞர்களையும், கைவினைஞர்களையும் ஒன்றிணைக்கும் 26-வது ஹூனார் ஹாத் கண்காட்சி: மத்திய அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் புதுதில்லியில் தொடங்கி வைத்தார்

Posted On: 21 FEB 2021 3:29PM by PIB Chennai

நாடு முழுவதும் உள்ள கலைஞர்களும், கைவினைஞர்களும் கலந்துகொள்ளும் 26-வது ஹூனார் ஹாத் கண்காட்சியை புதுதில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு அரங்கத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் இன்று தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங்நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் ஹூனார் ஹாத் நிகழ்ச்சி முக்கிய பங்கு வகிப்பதாகத் தெரிவித்தார்.   

 பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான அரசு உள்நாட்டு கலைஞர்களையும், கைவினைஞர்களையும் ஊக்குவிப்பதாகவும், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கலைஞர்களை இந்தக் கண்காட்சி ஒன்றிணைப்பதாகவும் அவர் கூறினார்.

தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் நடவடிக்கைகளில் இந்தக் கண்காட்சி முக்கிய பங்கு வகிப்பதாகவும், உள்ளூர் பொருட்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் வாய்ப்பாக பெருந்தொற்றை ஹூனார் ஹாத் மாற்றி அமைத்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

 

நிகழ்ச்சியில் பேசிய மத்திய சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சர் திரு. முக்தார் அப்பாஸ் நக்வி, ஐந்து லட்சத்திற்கும் அதிகமான கலைஞர்களுக்கும், கைவினைஞர்களுக்கும் இந்த கண்காட்சியின் வாயிலாக இதுவரை வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.   நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் 75 ஹூனார் ஹாத்  கண்காட்சிகளின்  வாயிலாக 7,50,000  கலைஞர்களுக்கும், கைவினைஞர்களுக்கும்  தமது அமைச்சகம் வேலை வாய்ப்புகளை வழங்கும் என்றும் அவர் கூறினார்.

மக்களவை உறுப்பினர் திருமதி. மீனாட்சி லேகி, மத்திய சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சகத்தின் செயலாளர் திரு. பி கே தாஸ் மற்றும் உயர் அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சகத்தால் உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவித்தல்என்னும் கருப்பொருளில் நடத்தப்படும் 26-வது ஹூனார் ஹாத் கண்காட்சி, மார்ச் 1ஆம் தேதி வரை நடைபெறும். தமிழகம் உள்ளிட்ட 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட கலைஞர்களும், கைவினைஞர்களும் இதில் கலந்துகொண்டு தங்களது பாரம்பரிய கலைப்பொருட்களை காட்சிப்படுத்துகின்றனர்.

http://hunarhaat.org என்ற இணையதளத்தின் வாயிலாகவும் இந்தக் கண்காட்சியில் இடம்பெறும் பொருட்கள் இந்தியா மட்டுமல்லாது உலக அளவிலும் விற்பனை செய்யப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1699762


(Release ID: 1699788) Visitor Counter : 155