நிதி அமைச்சகம்

கோடிக் கணக்கில் வரி ஏய்ப்பு : ஜம்மு காஷ்மீரில் வருமானவரித்துறை சோதனை

Posted On: 21 FEB 2021 1:26PM by PIB Chennai

வரி ஏய்ப்பு தொடர்பாக, ஜம்மு காஷ்மீரில் உள்ள பிரபல மருத்துவமனை குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை கடந்த 19 ஆம் தேதி சோதனை நடத்தியது.

இந்தக் குழுமம், மருத்துவமனை, ரியல் எஸ்டேட் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த குழுமம் அதிகளவில் நிலங்களை வாங்கி அங்கு குடியிருப்புகளை கட்டி விற்றுள்ளது.

ஆனால் பதிவுத் தொகைக்கு கூடுதலான விலையை இந்த குழுமம் ரொக்கமாக பெற்று, அதை வருமான வரியில் கணக்கு காட்டவில்லை.

இதற்கான ஆவணங்கள் சோதனையில் கைப்பற்றப்பட்டன. ரூ.100 கோடிக்கும் அதிகமான சொத்து பரிமாற்றங்களை இந்த குழுமம்  கடந்த 2013-14 ஆம் ஆண்டு முதல் ரொக்க பணத்திலேயே மேற்கொண்டுள்ளது.

இந்த குழுமத்தின் முதலீடுகள் எல்லாம் வரி செலுத்தப்படாத வருமானத்தின் மூலம் வாங்கப்பட்டவை என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த குழுமத்தின் விற்பனை செய்த சொத்துக்களில் முத்திரைத் தாள் வரி ஏய்ப்பும் செய்யப்பட்டுள்ளது .

தனிநபர்கள் பலர் வீடுகள், இடங்களை சம்பந்தம் இல்லாதவர்களிடம் இருந்து பரிசுகளாகவும் பெற்றுள்ளனர். பரிசளித்தவர்களின் வருமானமும் கணக்கு காட்டப்படவில்லை. இந்த சோதனையில் பினாமி சொத்து ஆவணங்களும் கண்டெடுக்கப்பட்டன.

ரூ.82.75 லட்சம் ரொக்கப் பணம், ரூ.35.7 லட்சம் மதிப்பிலான நகைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. வங்கி லாக்கர் ஒன்றும் சீல் வைக்கப்பட்டது. இது தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1699742



(Release ID: 1699760) Visitor Counter : 175