ரெயில்வே அமைச்சகம்
மேற்கு வங்கத்தில் ரயில்வே கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் மத்திய அமைச்சர் திரு. பியூஷ் கோயல்
Posted On:
19 FEB 2021 5:37PM by PIB Chennai
மேற்கு வங்கத்தில் ரயில்வே கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்கள் பலவற்றை ரயில்வே அமைச்சர் திரு. பியூஷ் கோயல் தொடங்கிவைத்தார்.
மேற்கு வங்கம் சந்திரகாச்சி என்ற இடத்தில் 2வது நடை மேம்பாலம், சங்க்ரயில் பகுதியில் சரக்கு முனையம், ஹவுராவில் விவேகானந்தா தியான மையம், சீல்டா ரயில் நிலையத்தில், தங்கும் அறை, 2 எஸ்கலேட்டர்கள், கொல்கத்தா ரயில் நிலையத்தில் பயணிகள் தங்கும் அறை உட்பட பல திட்டங்களை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
நாட்டில் இன்று 8,500 ரயில் நிலையங்கள் சுத்தமான ரயில் நிலையங்களாக உள்ளன. இதற்கான பொறுப்பு ஸ்டேஷன் மாஸ்டர்களிடம் விடப்பட்டுள்ளது. எல்லா ரயில்களும், தானியங்கி கருவிகள் மூலம் சுத்தம் செய்யப்படுகின்றன. ரயிலின் சுத்தத்தை வாடிக்கையாளர்கள் பாராட்டுகின்றனர்.
சுத்தம் தொடர்பான புகார்கள் குறைந்துள்ளன.
ரயில்கள் மின்மயமாக்கம் நாடு முழுவதும் நடைபெறுகிறது. 2030 ஆம் ஆண்டுக்குள், உலகின் மாசுஅற்ற முதல் ரயில்வேயாக, இந்திய ரயில்வே இருக்கும்.
இவ்வாறு திரு. பியூஷ் கோயல் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
***
(Release ID: 1699505)