சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்

புதுதில்லி ஜவஹர்லால் நேரு அரங்கில் ‘ஹுனார் ஹாத்’-ஐ பிப்ரவரி 21 அன்று பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் திறந்து வைக்கிறார்


நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி நடத்தப்படும் 75 ஹுனார் ஹாத் கண்காட்சிகள் மூலம் 7.50 லட்சம் கைவினை கலைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகம் வழங்குகிறது: திரு. முக்தர் அப்பாஸ் நக்வி

Posted On: 19 FEB 2021 4:42PM by PIB Chennai

நாடு முழுவதுமுள்ள கைவினை கலைஞர்களின் 26-வதுஹுனார் ஹாத்கண்காட்சியை புதுதில்லி ஜவஹர்லால் நேரு அரங்கில் வரும் பிப்ரவரி 21 அன்று காலை 9.30 மணிக்கு பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் திறந்து வைக்கிறார்.

மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி (தனிப்பொறுப்பு) இணை அமைச்சர் திரு. மன்சுக் மாண்டவியா தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார்.

மக்களவை உறுப்பினர் திருமதி. மீனாட்சி லேகி மதிப்புறு விருந்தினராக பங்கேற்பார்.

உள்ளூர் தொழில்களுக்கு ஊக்கம்என்பதை மையக்கருவாகக் கொண்டு 26-வது ஹுனார் ஹாத்தை பிப்ரவரி 20-ல் இருந்து மார்ச் 1 வரை மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகம் நடத்துகிறது.

இது குறித்து இன்று பேசிய சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சர் திரு. முக்தார் அப்பாஸ் நக்வி, நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி நடத்தப்படும் 75 ஹுனார் ஹாத் கண்காட்சிகள் மூலம் 7.50 லட்சம் கைவினை கலைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகம் வழங்குகிறது என்று கூறினார்.

புதுதில்லியில் நடைபெற உள்ள ஹுனார் ஹாத் கண்காட்சியில் நாடு முழுவதுமுள்ள 31-க்கும் அதிகமான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 600 கைவினைக் கலைஞர்கள் பங்கேற்கின்றனர் என்று தெரிவித்தார்.

வேற்றுமையில் ஒற்றுமை என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் நாட்டின் அனைத்து மூலைகளில் இருந்தும் கையால் செய்யப்பட்ட பொருட்கள் கண்காட்சியில் கிடைக்கும் என்றும் திரு. நக்வி மேலும் தெரிவித்தார்.

http://hunarhaat.org மற்றும் ஜெம் (GeM) இணையதளத்திலும் ஹுனார் ஹாத் கண்காட்சியில் மக்கள் பங்கேற்று பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

 

***

 



(Release ID: 1699503) Visitor Counter : 117