நிதி அமைச்சகம்

மின்சாரத் துறை சீர்திருத்தங்களை ஓரளவு செயல்படுத்தியுள்ள ஐந்து மாநிலங்களுக்கு ரூ 2,094 கூடுதல் கடன் பெற அனுமதி

Posted On: 19 FEB 2021 2:15PM by PIB Chennai

சீர்திருத்தம் சார்ந்த கூடுதல் கடன் அனுமதிகள், மாநிலங்களில் மின்சாரத் துறை சீர்திருத்தங்களை ஊக்குவித்து வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, பீகார், கோவா, கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய ஐந்து மாநிலங்கள் தொழில்நுட்ப மற்றும் விநியோக நஷ்டங்களை குறைப்பதற்காகவும், விநியோகம் மற்றும் வருவாய் இடைவெளியை குறைப்பதற்காகவும் மின்சார அமைச்சகம் நிர்ணயித்திருந்த இலக்குகளை வெற்றிகரமான அடைந்துள்ளன.

மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினங்கள் துறை மின்சாரத் துறைக்காக வகுத்திருந்த மூன்று சீர்திருத்தங்களில் இரண்டு மேற்கண்டவையாகும்.

இவற்றை இந்த ஐந்து மாநிலங்கள் செயல்படுத்தியுள்ளதால், தொழில்நுட்ப மற்றும் விநியோக நஷ்டங்களை குறைப்பதற்காக மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 0.05 சதவீதம் அளவுக்கு கூடுதல் கடனாக பெறவும், விநியோகம் மற்றும் வருவாய் இடைவெளியை குறைப்பதற்காக மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் இன்னுமொரு 0.05 சதவீதம் அளவுக்கு கூடுதல் கடனாக பெறவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஐந்து மாநிலங்களைத் தவிர, ஆந்திரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகியவை மின்சார மானியத்தை விவசாயிகளுக்கு நேரடியாக பரிவர்த்தனை செய்யும், மின்சாரத் துறையின் மூன்றாவது சீர்திருத்தை செயல்படுத்தியுள்ளன.

இதன் காரணமாக, மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 0.15 சதவீதம் அளவுக்கு கூடுதல் கடனாக பெற அவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1699355

 

**


(Release ID: 1699398) Visitor Counter : 241