அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
குறைந்தவிலை மருந்துகளுக்காக பாடுபட்டு வரும் சிஎஸ்ஐஆர்-சிடிஆர்ஐ, சென்ட்குரோமன் மற்றும் அர்டீத்தெர் போன்ற முக்கிய மூலக்கூறுகளை உலகத்துக்கு அளித்துள்ளது: டாக்டர் ஹர்ஷ் வர்தன்
இடுகை இடப்பட்ட நாள்:
17 FEB 2021 6:23PM by PIB Chennai
அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் குழு-மத்திய மருந்துகள் ஆராய்ச்சி நிறுவனம் (சிஎஸ்ஐஆர்-சிடிஆர்ஐ) குறைந்தவிலை மருந்துகளுக்காக பாடுபட்டு வருவதாகவும், சென்ட்குரோமன் (ஸ்டீராய்டு இல்லாத முதல் வாய்வழி கருத்தடை மருந்து) மற்றும் அர்டீத்தெர் (பெருமூளை மலேரியாவுக்கான உயிர் காக்கும் மருந்து) போன்ற முக்கிய மூலக்கூறுகளை உலகத்துக்கு அளித்துள்ளதாகவும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் அமைச்சரும் சிஎஸ்ஐஆர் துணை தலைவருமான டாக்டர் ஹர்ஷ் வர்தன் இன்று கூறினார்.
லக்னோவில் நடைபெற்ற சிஎஸ்ஐஆர்-சிடிஆர்ஐ-ன் 70-வது ஆண்டு விழாவில் புதுதில்லியில் இருந்து காணொலி மூலம் உரையாற்றிய அமைச்சர், “இந்நிறுவனத்தின் பங்களிப்பு மகத்தானது. வெறும் மருந்துகளோடு நிற்காமல், தரமான ஆராய்ச்சி மற்றும் மனிதவள மேம்பாட்டையும் மனிதகுலத்துக்கு சிஎஸ்ஐஆர்-சிடிஆர்ஐ அளித்துள்ளது,” என்றார்.
நிறுவனத்தின் விஞ்ஞானிகளை வாழ்த்திய டாக்டர் ஹர்ஷ் வர்தன், கொவிட்-19-க்கு எதிரான நாட்டின் போருக்கு பல்வேறு விதங்களில் சிஎஸ்ஐஆர்-சிடிஆர்ஐ பங்காற்றியதாக குறிப்பிட்டார்.
“இன்று வரை, 90 லட்சம் தடுப்புமருந்துகள் இந்தியாவில் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 40 நாடுகள் தடுப்புமருந்தை கேட்டு கோரிக்கை வைத்திருந்த நிலையில், 23 நாடுகளுக்கு நாம் தற்போது தடுப்பூசியை வழங்கி வருகிறோம்,” என்றும் அவர் கூறினார்.
விஞ்ஞானத்திற்கும், சிஎஸ்ஐஆர்-சிடிஆர்ஐ-க்கும் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயி அளித்த ஆதரவை குறிக்கும் வகையில், அவரது நினைவாக நிபுணர்கள் பங்கேற்கும் உரையாடல் வரிசையையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.
சிஎஸ்ஐஆர்-சிடிஆர்ஐ-ன் 70-வது ஆண்டு விழாவை குறிக்கும் வைகையில் விழா மலரையும், தேநீர் மேசை புத்தகத்தையும் அமைச்சர் வெளியிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1698779
***
(வெளியீட்டு அடையாள எண்: 1698879)
வருகையாளர் எண்ணிக்கை : 293