வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்

கொவிட்டுக்கு பிந்தைய இந்தியா மற்றும் அதன் பொருளாதாரத்திற்கு வடகிழக்கு தலைமையேற்கும்: டாக்டர் ஜிதேந்திர சிங்

இடுகை இடப்பட்ட நாள்: 17 FEB 2021 5:31PM by PIB Chennai

கொவிட்டுக்கு பிந்தைய இந்தியா மற்றும் அதன் பொருளாதாரத்திற்கு வடகிழக்கு தலைமையேற்கும் என்று மத்திய வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

சரக்கு போக்குவரத்தை வலுப்படுத்துதல்: வடகிழக்குக்கான மின்னணு-வணிக சவால்கள் மற்றும் வாய்ப்புகள்என்னும் தலைப்பில் இந்திய தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த இணைய கருத்தரங்கில் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

வடகிழக்கை வளர்ச்சிக்கான புதிய உந்துசக்தியாக பிரதமர் திரு. நரேந்திர மோடி கருதுகிறார். 2022-ஆம் வருடத்தில் இந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது வடகிழக்கு பிராந்தியம் நல்ல வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும் என்றும் என்று அவர் விரும்புகிறார் என்று கூறிய அமைச்சர், இந்த லட்சியத்தை அடைவதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1698744

                                                     ----

(Release ID: 1698744)

 


(வெளியீட்டு அடையாள எண்: 1698857) வருகையாளர் எண்ணிக்கை : 192
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Manipuri , Telugu