மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

கொவிட் 19 தொற்று காலத்தில் கல்வி தொடர்வதை உறுதி செய்ய நவோதயா வித்யாலயா சமிதி மேற்கொண்ட முயற்சிகள்

Posted On: 16 FEB 2021 4:43PM by PIB Chennai

கொவிட் தொற்று காலத்தில், புலம் பெயர்ந்த 9ம் வகுப்பு மாணவர்கள், 3,173  பேர் பாதுகாப்பாக திரும்புவதை, கல்வி அமைச்சகம்,  உள்துறை அமைச்சகம் மற்றும் மாநில நிர்வாகத்தின் ஆதரவோடு நவோதயா வித்யாலயா சமிதி உறுதி செய்தது.  ஆன்லைன் வகுப்புகள் எடுப்பது குறித்து ஆசிரியர்களுக்கு ஆன்லைன் மூலமாக பயிற்சி அளிக்கப்பட்டு,  மாணவர்களுக்கு கல்வி இழப்பு ஏற்படாததை உறுதி செய்ய நவோதயா வித்யாலயா சமிதி அனைத்து முயற்சிகளையும் எடுத்தது. முறையான உபகரணங்கள் இல்லாத மாணவர்களுக்கும், முறையான கல்வி வழங்குவதை உறுதி செய்ய, அச்சிடப்பட்ட பாடங்கள் வழங்கப்பட்டன.

ஜவஹர் நவோதயா பள்ளிகளைத் திறப்பதற்கு நிலையான செயல்பாட்டு விதிமுறைகளையும், மத்திய அரசின் விதிமுறைகள் மற்றும் மாநில நிர்வாக விதிமுறைகள்  அடிப்படையில்,  நவோதய வித்யாலயா சமிதி உருவாக்கியது.

இதையடுத்து 10ம் வகுப்பு 12ம் வகுப்பு மாணவர்கள், ஜவஹர் நவோதயா பள்ளிகளுக்கு பெற்றோர் சம்மதத்துடன் சென்றனர்.  மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 406 ஜவஹர் நவோதயா பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு கல்வி இடைவெளியைப் போக்க, இணைப்பு பாடங்களும், சிறப்பு வகுப்புகளும் எடுக்கப்படுகின்றன. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய அளவிலான மாதிரித் தேர்வுகள் முடிக்கப்பட்டுள்ளன.

ஜவஹர் நவோதயா பள்ளிகளில் மாணவிகளை ஊக்குவிக்க விஞ்ஞான் ஜோதி திட்டத்தை அறிவியல் தொழில்நுட்பத்துறையுடன் இணைந்து நவோதயா வித்யாலயா சமிதி மேற்கொள்கிறது. முதல்கட்டமாக 58 ஜவஹர் நவோதய பள்ளிகளில் விஞ்ஞான் ஜோதி திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது. இரண்டாவது கட்டத்தில் இத்திட்டம் மேலும் 42 பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்படுகிறது. 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1698461

************


(Release ID: 1698494)