ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

2021-22 நிதிநிலை அறிக்கை: எதிர்காலத்தை நோக்கிய, ரசாயனம், பெட்ரோ ரசாயன துறையின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம்

प्रविष्टि तिथि: 16 FEB 2021 1:57PM by PIB Chennai

ரசாயனம் மற்றும் பெட்ரோ ரசயனத் தயாரிப்புகளின் விலையை சர்வதேச அளவில் போட்டியிடுவதற்கு ஏதுவாக, நாஃப்தா போன்ற மூலப்பொருட்களின் இறக்குமதி வரியைக் குறைக்க வேண்டும் என்று ரசாயனம் மற்றும் பெட்ரோ ரசயனத்துறை நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறது. இந்தக் கோரிக்கைக்கு 2021-22 நிதிநிலை அறிக்கையில் தீர்வு எட்டப்பட்டுள்ளது. ரசாயனம் மற்றும் பெட்ரோ ரசயனத்துறையைச் சேர்ந்த வல்லுனர்கள், இந்த மத்திய நிதிநிலை அறிக்கை எதிர்காலத்தை நோக்கிய, வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருப்பதாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.

உள்கட்டமைப்பு செலவுகளுக்கு பெரும் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருப்பதன் காரணமாக பாலிமர், சிறப்பு ரசாயனங்கள் போன்ற பெட்ரோ ரசாயனங்களின் பயன்பாடு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேளாண் துறையில்  சொட்டு நீர் பாசனத்துக்கான ஒதுக்கீடு இரண்டு மடங்காக ரூ. 10,000 கோடியாக உயர்த்தப்பட்டிருப்பதால் பாலிமர் அடிப்படையிலான பொருட்களின், சேவைகளின் எரிவாயு தேவை மேலும் அதிகரிக்கும்.

பழைய வாகன அழிப்பு கொள்கையின் மூலம் புதிய மற்றும் கூடுதல் வாகனங்களின் தேவையை எதிர்நோக்கி பாலிமர், எலாஸ்டோமர் போன்றவற்றின் பயன்பாடு அதிகரிக்கப்படும்.

 

சுகாதாரத் துறைக்கும் தடுப்பூசிக்கும் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதால் ஊசிகளின் பயன்பாடும், பாலிமரை அடிப்படியாகக் கொண்ட மருத்துவப் பொருட்களின் பயன்பாடும் ஊக்குவிக்கப்படும்.

அரசின் செலவினம் உயர்த்தப்படுவதால் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படும் பெட்ரோ ரசாயனங்கள், பாலிமரின் தேவைகள் வெகுவாக அதிகரிக்கும்.

முக்கிய துறைகளில் அறிவிக்கப்பட்டுள்ள உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டங்கள், நாட்டில் பெட்ரோ ரசாயன பயன்பாட்டை ஊக்குவிக்கும். அலைபேசி தயாரிப்பு, வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்கள், மருத்துவ உபகரணங்கள், ஜவுளிப் பொருட்கள் போன்ற ஏழு முக்கிய துறைகளில் பெட்ரோ ரசாயனங்களின் பயன்பாடு முக்கிய இடம் வகிப்பதுடன் ரூ. 1.41 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டிருப்பது, பெட்ரோ ரசாயனத் துறையின் வளர்ச்சிக்கு கூடுதல் பலம் சேர்க்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1698394

***************


(रिलीज़ आईडी: 1698437) आगंतुक पटल : 202
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri