வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
ஏற்றுமதி மதிப்பு சங்கிலியில் பாதுகாப்பான, அளவிடக்கூடிய மற்றும் விலை குறைவான இடை நடவடிக்கையை உறுதி செய்வதற்காக கிரேப்நெட்டை அபேடா மேம்படுத்தியுள்ளது
Posted On:
15 FEB 2021 5:57PM by PIB Chennai
ஏற்றுமதி மதிப்பு சங்கிலியில் உள்ள அனைத்து பங்குதாரர்களுக்கும் பாதுகாப்பான, அளவிடக்கூடிய மற்றும் விலை குறைவான இடை நடவடிக்கையை உறுதி செய்வதற்காகவும், தனது கண்டறிதல் முயற்சிக்கு சைபர் பாதுகாப்பை வழங்கும் விதத்திலும் அடுத்த தலைமுறை தொகுப்பு சங்கிலி மற்றும் மேகக் கணினி வசதியுடன் கூடிய கிரேப்நெட்டை அபேடா செயல்படுத்தி உள்ளது.
இணையம் சார்ந்த சான்றளிப்பு மற்றும் கண்டறிதல் மென்பொருள் அமைப்பான கிரேப்நெட், இந்தியாவில் இருந்து ஐரோப்பிய யூனியனுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பண்ணை பசுமை திராட்சைகளை முழுமையாக கண்காணிக்கும்.
பண்ணையில் இருந்து அது சென்றடையும் இடம் வரை சரக்கு விவரங்களை அபேடாவால் கண்காணிக்க முடியும். தொகுப்பு சங்கிலி இணைப்புக்குப் பிறகு கிரேப்நெட் இன்னும் பாதுகாப்பானதாக இருக்கும்.
அபேடா நிறுவன தினமான 2021 பிப்ரவரி 13 அன்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. தனது பங்குதாரர்களுக்கு பாதுகாப்பான, அளவிடக்கூடிய மற்றும் விலை குறைவான சூழ்நிலையை உறுதி செய்வதற்காக கிரேப்நெட்டை அபேடா மேம்படுத்தியுள்ளது
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1698183
------
(Release ID: 1698250)