வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

2021, ஜனவரி மாத மொத்த விலை குறியீட்டு எண்கள் வெளியீடு

Posted On: 15 FEB 2021 12:02PM by PIB Chennai

2021, ஜனவரி மாதத்துக்கான (தற்காலிக) மொத்த விலை குறியீட்டு எண்களை தொழில் வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறையின் பொருளாதார ஆலோசகர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

மாதாந்திர மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையில் 2021 ஜனவரி மாதத்துக்கான பணவீக்கம் 2.03 சதவீதமாக (தற்காலிகம்) இருந்தது. இது கடந்தாண்டின் இதே மாதத்தில் 3.52 சதவீதமாக இருந்தது.

முதன்மைப் பொருட்கள் குழுவின் குறியீட்டு எண்  2021 ஜனவரி மாதத்தில்(தற்காலிகம்) -1.77 சதவீதம் குறைந்து 143.9 ஆக உள்ளது. இது 2020 டிசம்பர் மாதத்தில் 146.5ஆக இருந்தது. 2020-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2021 ஜனவரியில் கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு ஆகியவற்றின் விலைகள் (9.48 சதவீதம்) மற்றும் கனிமங்கள் (2.67 சதவீதம்) அதிகரித்தன. 2021 ஜனவரியில் உணவு சாராப் பொருட்கள் (-0.43 சதவீதம்) மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள் ( -2.99சதவீதம்) 2020 டிசம்பர் மாதத்தைவிட குறைந்தன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1698049

***************



(Release ID: 1698098) Visitor Counter : 149


Read this release in: Manipuri , English , Urdu , Hindi