சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகம் பிப்ரவரி 20 அன்று புதுதில்லியில் கவியரங்கத்தை நடத்தவுள்ளது
Posted On:
13 FEB 2021 8:03PM by PIB Chennai
‘ஒரே பாரதம், ஒப்பற்ற பாரதம்’ என்னும் தலைப்பில் கவியரங்கம் ஒன்றை 2021 பிப்ரவரி 20 அன்று மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகம் புதுதில்லியில் நடத்தவிருக்கிறது.
நாட்டின் புகழ்பெற்ற கவிஞர்கள் இதில் பங்கேற்று தங்கள் படைப்புகளை வழங்குவார்கள்.
புகழ்பெற்ற கவிஞர்களான திரு. வாசிம் பரேல்வி, திருமதி. ஷபீனா அடீப், திரு. மன்ஜர் போபாலி, திரு. பாப்புலர் மீருத்தி, திருமதி. சபா பல்ராம்புரி, திருமிகு. நசீம் நிக்கத், திருமதி. மும்தாஜ் நசீம், கர்னல் வி பி சிங், திரு. அலோக் ஸ்ரீவட்ஷவ, சர்தார் சுரேந்திர சிங் ஷாஜர், திரு. குர்ஷித் ஹைதெர், திரு .அகில் நோமானி, டாக்டர் நய்யார் ஜலால்புரி, திரு. சிக்கந்தர் ஹயாத் கட்பாட் உள்ளிட்டோர் தங்கள் படைப்புகள் மூலம் பார்வையாளர்களை பரவசப்படுத்துவார்கள்.
புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சி குறித்து இன்று பேசிய மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சர் திரு. முக்தர் அப்பாஸ் நக்வி, பிப்ரவரி 20 அன்று மாலை 4 மணியில் இருந்து 7 மணி வரை கவியரங்கம் நடைபெறும் என்றார்.
“வேற்றுமையில் ஒற்றுமை என்னும் தத்துவத்தை வலுப்படுத்தும் நமது நாட்டின் மிகச்சிறந்த கலாச்சார வழிமுறை கவியரங்கம் ஆகும்.
அமைதியின் செய்தியை மக்களுக்கு இது கொண்டு செல்வதோடு, சமூக நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை இது வலுப்படுத்துகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1697802
------
(Release ID: 1697814)
Visitor Counter : 199