பாதுகாப்பு அமைச்சகம்
பனிச்சரிவால் உருவான வெள்ளப்பெருக்கின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளை எல்லையோர சாலைகள் அமைப்பின் தலைமை இயக்குநர் ஆய்வு செய்தார்
Posted On:
13 FEB 2021 7:44PM by PIB Chennai
உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் பனிச்சரிவால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு பின்னர் எல்லையோர சாலைகள் அமைப்பால் செயல்படுத்தப்பட்டு வரும் மீட்பு, நிவாரண மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக எல்லையோர சாலைகள் அமைப்பின் தலைமை இயக்குநர் லெப்டினெண்ட் ஜெனரல் ராஜீவ் சவுத்ரி இன்று ஜோஷிமத் பிரிவை பார்வையிட்டார்.
“வெள்ளப்பெருக்கு பற்றிய தகவல் கிடைத்தவுடன் உடனடியாக செயலில் இறங்கிய எல்லையோர சாலைகள் அமைப்பு, 15 கனரக இயந்திரங்கள் உட்பட 100 வாகனங்கள்/இயந்திரங்களை மீட்பு மற்றும் மறுசீராக்க நடவடிக்கைகளுக்காக களத்தில் இறக்கியது,” என்று அவர் கூறினார்.
இந்திய விமானப்படையின் உதவியுடன் சில முக்கிய கருவிகளை விமானம் மூலம் எல்லையோர சாலைகள் அமைப்பு பாதிக்கப்பட்ட இடத்திற்கு கொண்டு சென்றது. எல்லையோர சாலைகள் அமைப்பின் 20 குழுக்கள் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளன.
எல்லையோர சாலைகள் அமைப்பின் ஷிவாலிக் குழுவின் கடின உழைப்பையும், மும்முரமான முயற்சிகளையும் பாராட்டிய தலைமை இயக்குநர், கடும் சவாலான தட்பவெட்ப நிலைமையையும் பொருட்படுத்தாமல் எல்லையோர சாலைகள் அமைப்பினர் 24 மணி நேரமும் தொடர்ந்து பணிபுரிந்து வருவதாகக் கூறினார்.
200 அடியில் பாலமொன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1697797
-----
(Release ID: 1697811)
Visitor Counter : 148