நிலக்கரி அமைச்சகம்
தேசிய நிலக்கரி குறியீடு
Posted On:
11 FEB 2021 12:11PM by PIB Chennai
மத்திய நிலக்கரி அமைச்சர் திரு. பிரகலாத் ஜோஷி, நாடாளுமன்றத்தின் மக்களவையில் நேற்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளதாவது:
தேசிய நிலக்கரி குறியீடு:
வருமான அடிப்படையில் நிலக்கரி சுரங்கங்களின் வர்த்தக ஏலத்தை நிலக்கரி அமைச்சகம் தொடங்கியுள்ளது. நிலக்கரியின் வெளிச்சந்தை விலைகளின் அடிப்படையில் வருமான அளவை நிர்ணயிக்கும் வகையில் ஓர் தேசிய நிலக்கரி குறியீடு நடைமுறைப்படுத்தப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை ஆண்டிலிருந்து (2017-18) குறிப்பிட்ட மாதத்தில் நிலக்கரியின் விலையில் ஏற்படும் மாற்றத்தை பிரதிபலிக்கும் விலை குறியீடாக தேசிய நிலக்கரி குறியீடு செயல்படும்.
ஏற்றுமதி உள்ளிட்ட நிலக்கரியின் அனைத்து விற்பனை விலைகளையும் கருத்தில்கொண்டு இந்த குறியீடு தயாரிக்கப்படும். கடந்த 2030ஆம் ஆண்டு ஜூன் 4-ஆம் தேதி இந்த குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டு அதுகுறித்த அறிவிப்பு நிலக்கரி அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
நிலக்கரி துறையில் சீர்திருத்தங்கள்:
நிலக்கரி சுரங்கங்கள் (சிறப்பு வழி வகைகள்) சட்டம் 2015, சுரங்கங்கள் மற்றும் கனிமவள (வளர்ச்சி மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 1957 ஆகியவற்றை திருத்தி அமைப்பதற்காக கனிமவள சட்டங்கள் (திருத்த) சட்டம் 2020 அமல்படுத்தப்பட்டது. இந்த திருத்தங்களின் வாயிலாக ஏற்பட்ட மாற்றங்கள்:
• கண்டறியப்பட்டுள்ள நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி தொகுப்புகளை ஏலத்தில் விடுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க உதவுவதற்கு, ஒட்டுமொத்தமான, வாய்ப்பறிதல் உரிமம்- மற்றும்- சுரங்கக்குத்தகை முறையில் நிலக்கரி தொகுப்புகளை ஒதுக்குவதற்கான திருத்தம்.
• நிலக்கரி சுரங்கங்கள் (சிறப்பு வழி வகைகள்) சட்டத்தின் கீழ் பிரிவு இரண்டு மற்றும் மூன்றாம் நிலக்கரி சுரங்கங்களின் பயனாளர்களை நிர்ணயிக்கும் உரிமை மத்திய அரசிடம் வழங்கப்பட்டது.
• நிலக்கரி சுரங்கங்கள் (சிறப்பு வழி வகைகள்) சட்டம், சுரங்கங்கள் மற்றும் கனிமவள (வளர்ச்சி மற்றும் கட்டுப்பாடு) சட்டம் ஆகியவற்றின் கீழ் நிலக்கரி/ பழுப்பு நிலக்கரி விற்பனைக்காக வருமான பங்கின் அடிப்படையில் அவற்றை ஏலத்தில் விடுவதற்கான முறைக்கு 28.05.2020 அன்று அனுமதி வழங்கப்பட்டது.
நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள்:
நிலக்கரி உற்பத்தியின் திறனை அதிகரிக்கும் இலக்கை அடைவதற்கு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது:
• சுரங்க அனுமதி வழங்குவதற்கான ஒற்றை சாளர முறை அறிமுகம்
• சுரங்க திட்ட முறைகளும், அதற்கான அனுமதிகளும் எளிமையாக்கப்பட்டன
• வர்த்தக ரீதியான நிலக்கரியின் விற்பனைக்காக நிலக்கரி சுரங்கங்களின் ஏலம் துவக்கம்
• கடந்த காலங்களில் அனுமதி வழங்கப்பட்ட அனைத்து நிலக்கரி சுரங்கங்களிலும் முறையான கண்காணிப்பு மற்றும் ஆய்வு
• ஒதுக்கப்பட்ட நிலக்கரி சுரங்கங்களில் விரைவாக பணிகளை துவங்கும் வகையில் நிலக்கரி செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட மாநிலத்தின் தலைமை செயலாளர் ஆகியோர் தலைமையில் கண்காணிப்பு குழு கூட்டம்
------
(Release ID: 1697162)
Visitor Counter : 216