அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

தகவல், முன்னறிவிப்பு, மதிப்பீட்டுக்கழகத்தின் 34வது நிறுவன தின கொண்டாட்டம்

Posted On: 10 FEB 2021 5:07PM by PIB Chennai

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் தன்னாட்சி நிறுவனமாக இயங்கும் தொழில்நுட்பம், தகவல், முன்னறிவிப்பு, மதிப்பீட்டுக்கழகத்தின் 34-வது நிறுவன தினம் புதுதில்லியில் இன்று கொண்டாடப்பட்டது.

தற்சார்பு இந்தியாவிற்கு தொழில்நுட்பம், புதுமை மற்றும் பொருளாதாரம்என்பது இதன் கருப்பொருளாகும்.

அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புதுமை கொள்கையும்தொழில்நுட்பம், தகவல், முன்னறிவிப்பு, மதிப்பீட்டுக்கழகத்தின் நடவடிக்கைகளும், புதிய கண்டுபிடிப்புகளையும் புதுமையையும் இணைக்கும் வகையிலான கலாச்சார மாற்றங்களை எவ்வாறு ஏற்படுத்தி, ஒவ்வொரு துறையிலும் அறிவியல் தொழில்நுட்பம் வாயிலாக தற்சார்பை அடைவது என்பது தொடர்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் செயலாளர் பேராசிரியர் அசுதோஷ் ஷர்மா எடுத்துரைத்தார்.

புதிய யுகத்தில் அறிவியலின் அபாரமான வளர்ச்சியை சுட்டிக்காட்டி பேசிய இந்த கழகத்தின் தலைவரும் நிதி ஆயோக் அமைப்பின் அறிவியல் உறுப்பினருமான டாக்டர் வி கே சரஸ்வத், குவாண்டம் கம்ப்யூட்டிங், சைபர் இயற்பியல் சார்ந்த முறைகள், பசுமை வேதியியல், நீர் போன்ற எதிர்கால தொழில்நுட்ப முன்னுரிமைகளை பட்டியலிட்டார்.

 

இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்யும் மற்றும் எதிர் காலத்திற்கு உகந்த தொழில்நுட்பங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தொழிலாளர்களின் திறமையையும், குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளையும் இணைத்து 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் சாக்ஷாம் என்ற இணைய தளமும், கடற் பாசிகளின் வர்த்தக வேளாண்மைக்கான கடற்பாசி இயக்கமும் நிகழ்ச்சியின்போது துவங்கப்பட்டது. இந்திய மூங்கில் மற்றும் வடகிழக்கு மாகாணங்களில் பழங்கள் மற்றும் காய்கறிகளின் பதப்படுத்துதல் தொடர்பாக தகவல், முன்னறிவிப்பு, மதிப்பீட்டுக்கழகம் தயாரித்த இரண்டு அறிக்கைகளும் வெளியிடப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1696804

------


(Release ID: 1696899) Visitor Counter : 183


Read this release in: English , Urdu , Hindi