கலாசாரத்துறை அமைச்சகம்
இந்தியாவின் பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் பெருமையை பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்
Posted On:
08 FEB 2021 5:41PM by PIB Chennai
சங்கீத நாடக அகாடமி, கலாச்சார வளங்கள் மற்றும் பயிற்சிக்கான மையம், கலாஷேத்ரா அமைப்பு, கலைகளுக்கான இந்திரா காந்தி தேசிய மையம், தேசிய நாடக பள்ளி, சாகித்ய அகாடமி மற்றும் லலித் கலா அகாடமி ஆகிய மத்திய கலாச்சார அமைச்சகத்தின் நிறுவனங்கள் இந்தியாவின் பாரம்பரிய கலாச்சாரத்தை பாதுகாக்கும் மற்றும் ஊக்குவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
பல்வேறு அமைப்புகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நிபுணர்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில், “இந்தியாவின் புலனாகாத பாரம்பரிய மற்றும் பலதரப்பட்ட கலாச்சார பாரம்பரியங்களை பாதுகாப்பதற்கான திட்டம்” என்னும் திட்டத்தை கலாச்சார அமைச்சகம் உருவாக்கியுள்ளது.
யுனெஸ்கோ அமைப்பின் புலனாகாத கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான 2003-ஆம் ஆண்டு மாநாட்டை தொடர்ந்து, ஐந்து விரிவான பிரிவுகளில் இது வகைப்படுத்தப்பட்டுள்ளது.
வாய்வழி பாரம்பரியங்கள் மற்றும் வெளிப்பாடுகள், நிகழ் கலைகள், சமூக பழக்கவழக்கங்கள் மற்றும் பண்டிகைகள், இயற்கை மற்றும் பிரபஞ்சம் சார்ந்த அறிவு மற்றும் பழக்கவழக்கங்கள் மற்றும் பாரம்பரிய கைவினை நிபுணத்துவம் ஆகியவை இவையாகும்.
தொடர்ந்து வழங்கப்படும் மானியங்களைக் கொண்டு இந்தியாவின் பாரம்பரிய கலாச்சாரத்தை பாதுகாக்கும் மற்றும் ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை அகாடமிகள் எடுத்து வருகின்றன.
நாடாளுமன்றத்தின் மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு பிரகலாத் சிங் படேல் மேற்கண்ட தகவல்களை அளித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1696226
*********************
(Release ID: 1696340)
Visitor Counter : 518