மத்திய பணியாளர் தேர்வாணையம்
மத்திய ஆயுதப்படை உதவி கமாண்டன்ட் தேர்வு முடிவுகள் வெளியீடு
Posted On:
08 FEB 2021 5:27PM by PIB Chennai
மத்திய ஆயுதப்படை உதவி கமாண்டன்ட் பதவிகளுக்கான, எழுத்து தேர்வை மத்திய அரசு தேர்வாணையம் (யுபிஎஸ்சி) கடந்த டிசம்பர் 20ம் தேதி நடத்தியது. இதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டள்ளது. இவற்றின் விவரத்தை கீழ்கண்ட இணைப்பில் காணலாம்:
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2021/feb/doc20212801.pdf
இந்த பட்டியலில் உள்ளவர்களின் தேர்வு தற்காலிகமானது. இவர்கள் உடல் தகுதி தேர்வு, மற்றும் மருத்துவ தகுதி தேர்வுகளில் தகுதி பெற வேண்டும். எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், நேர்முகத் தேர்வின் போது அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.
உடல் தகுதிக்கான தேர்வு தேதி, இடம், நேரம் ஆகிய விவரங்களை விண்ணப்பதாரர்களுக்கு இந்தோ திபெத் எல்லை போலீஸ் தெரியப்படுத்தும்.
எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், விரிவான விண்ணப்பத்தை, யுபிஎஸ்சி இணையளத்தில், http://www.upsc.gov.in ஆன்லைன் மூலம் தாக்கல் செய்து சம்பந்தப்பட்ட சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த விரிவான விண்ணப்பம் யுபிஎஸ்சி இணையதளத்தில் பிப்ரவரி 12ம் தேதி முதல் 25ம் தேதி மாலை 6 மணி வரை இருக்கும். இதை பூர்த்தி செய்யும் விவரங்களும் யுபிஎஸ்சி இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1696219
*******************
(Release ID: 1696331)
Visitor Counter : 166