பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
அழுத்தமூட்டப்பட்ட இயற்கை எரிவாயு, உயிரி எரிவாயு ஊக்குவிப்பு
Posted On:
08 FEB 2021 5:15PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மக்களவையில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:
அழுத்தமூட்டப்பட்ட இயற்கை எரிவாயுவுக்கு ஊக்கமளித்தல்:
பெட்ரோலியம் மற்றும் இயற்கைவாயு கட்டுப்பாட்டு வாரியம், நகர்ப்புற வாயு விநியோக கட்டமைப்புக்கு அனுமதி வழங்கும் அமைப்பாகும். நகர்ப்புற வாயு விநியோக திட்டத்தை மேம்படுத்தும் வகையில் அழுத்தமூட்டப்பட்ட இயற்கை எரிவாயு நிலையங்கள் நிறுவப்படுகின்றன. 2020-ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி வரை நாட்டில் சுமார் 2543 அழுத்தமூட்டப்பட்ட இயற்கை எரிவாயு நிலையங்கள் இயங்குகின்றன. 10-வது நகர எரிவாயு விநியோக ஏலச்சுற்றுக்களின் மூலம் தற்போது வரை 27 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் 400-க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் 232 பகுதிகளில் நகர எரிவாயு விநியோக இணைப்புகளை மேம்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அழுத்தமூட்டப்பட்ட உயிரி எரிவாயு அலைகள்:
அழுத்தமூட்டப்பட்ட உயிரி எரிவாயு பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக கட்டுப்படியாகக்கூடிய போக்குவரத்துக்கான நீடித்த மாற்று வழி திட்டம் கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் அதிக எண்ணிக்கையிலான அழுத்தமூட்டப்பட்ட உயிரி எரிவாயு ஆலைகளை அமைக்க தனியார் தொழில்துறையினர் முன்வருவார்கள். மேலும் இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக அழுத்தமூட்டப்பட்ட உயிரி எரிவாயுவை நீண்டகால அடிப்படையில் கொள்முதல் செய்வதற்கு எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தைபடுத்துதல் நிறுவனங்கள் ஆர்வம் தெரிவித்து வருகின்றன. மேலும் இந்திய ரிசர்வ் வங்கியும் இந்த ஆலைகளுக்கு கடன் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கின்றது.
பெட்ரோலியம்/ இயற்கை எரிவாயுவின் ஏற்றுமதிகள்:
கடந்த 2017-18 ஆம் ஆண்டு 220.4 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்த கச்சா எண்ணெயின் ஏற்றுமதிகள் 2020 -21-இல் (ஏப்ரல்- டிசம்பர்) 143.2 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்தது. உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தி 2017-18 ஆம் ஆண்டில் 35.7 மில்லியன் மெட்ரிக் டன்னிலிருந்து 2020- 21-இல் (ஏப்ரல்- டிசம்பர்) 23.0 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்தது.
பெட்ரோலியம், எண்ணெய் மற்றும் மசகு பொருட்களின் ஏற்றுமதி 2017-18 ஆம் ஆண்டு 35.5 மில்லியன் மெட்ரிக் டன்னாகவும், 2020- 21-இல் (ஏப்ரல்- டிசம்பர்) 32.0 மில்லியன் மெட்ரிக் டன்னாகவும் இருந்தது.
இறக்குமதிகளின் எண்ணிக்கையைக் குறைத்து தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் நோக்கத்துடன் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி சார்ந்த துறைகளில் அரசு பல தரப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
**********************
(Release ID: 1696317)
Visitor Counter : 164