பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

ஆதி மகோத்சவ் பழங்குடியினர் திருவிழாவில் கண்கவர் ஆடை அலங்கார அணிவகுப்பு

Posted On: 07 FEB 2021 1:26PM by PIB Chennai

தில்லி ஹாட்டில் நடைபெற்றுவரும் ஆதிமகோத்சவ் என்ற தேசிய பழங்குடியினர் திருவிழாவில் இந்திய பழங்குடி மக்களின் பன்முகத்தன்மை வாய்ந்த கலை நிகழ்ச்சிகள் அனைவரின் கவனத்தையும் மிகவும் கவர்கின்றன.

இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற கண்கவர் பழங்குடி ஆடை அலங்கார அணிவகுப்பில், பிரபல கைவினைஞர் திருமிகு ரூமா தேவி மற்றும் ஆடை வடிவமைப்பாளர் திருமிகு ரீனா தாக்கா ஆகியோரது தயாரிப்பில் உருவான புடவைகள், மேலாடைகள், நகைகள், பைகள் போன்றவை இடம்பெற்றன.

பாரம்பரிய கலை மற்றும் கைவினைப் பொருட்களையும், பழங்குடி மக்களின் வளமான, பன்முகத் தன்மை வாய்ந்த கலாச்சாரத்தையும் வெளிப்படுத்தும் வகையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி பெருவாரியான மக்களிடையே, பழங்குடி கலாச்சாரத்தை பிரபலப்படுத்தும் என்று இந்தத் திருவிழாவை நடத்தும் இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் வளர்ச்சி கூட்டமைப்பான டிரைஃபெட் அமைப்பின் நிர்வாக இயக்குநர் திரு பிரவீர் கிருஷ்ணா கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1695928

 

------



(Release ID: 1695957) Visitor Counter : 146


Read this release in: English , Urdu , Hindi , Bengali