நிதி அமைச்சகம்

ரூ.12.67 கோடி ஜிஎஸ்டி வரி வசூல் மோசடி: பட்டய கணக்காளர் கைது

प्रविष्टि तिथि: 04 FEB 2021 6:06PM by PIB Chennai

ரூ.12.67 கோடி அளவுக்கு ஜிஎஸ்டி வரிவசூல் மோசடியில் ஈடுபட்ட பட்டய கணக்காளரை, ஜிஎஸ்டி உளவுத்துறை இயக்குனரகம் கைது செய்துள்ளது.

ஹரியானா குருகிராம் பகுதியைச் சேர்ந்த பட்டய கணக்காளர் ஹரிஸ் குமார் ராம்பெல். இவர் ஸ்டார்கிரஸ்ட்  சர்வீஸஸ் என்ற நிறுவனத்துக்கு ஜிஎஸ்டி வரி கணக்கு தாக்கல் செய்யும் பணியை மேற்கொண்டிருந்தார். ஜிஎஸ்டி வரி செலுத்துவதற்காக ஸ்டார் கிரஸ்ட் நிறுவனத்திடம் வசூலித்த தொகையில் ரூ.12.67 கோடியை இவர் அரசுக்கு செலுத்தவில்லை.

ஸ்டார் கிரஸ்ட் நிறுவனத்துக்கு இவர் போலி ஜிஎஸ்டி ரசீது மற்றும் ஜிஎஸ்டி வரித்தாக்கல் ஆவணங்களை அளித்துள்ளார். இதை கண்டுபிடித்த வடக்கு மண்டல ஜிஎஸ்டி உளவுத்துறை இயக்குனரகம் மோசடி செய்த ஹரிஸ் குமார் ராம்பெல்லை கைது செய்தது. அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.

மேலும் விவரங்களுக்கு: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1695194

 

------


(रिलीज़ आईडी: 1695300) आगंतुक पटल : 212
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी