பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் திட்டத்தால், சமூகத்தில் நல்ல மாற்றம்: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தகவல்

Posted On: 04 FEB 2021 6:08PM by PIB Chennai

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இராணி, மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

பாலின பாகுபாட்டை அகற்றுவதிலும், பெண் குழந்தைகளை மதிப்பதிலும், பெண்குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் திட்டம் சமூகத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என நிதி ஆயோக் மதிப்பீட்டில் தெரியவந்துள்ளது. இது பற்றிய விழிப்புணர்வும் அதிகளவில் உள்ளது.

* குழந்தைகளின் பாலின விகிதம் குறைந்து வந்தது ஆண்டாண்டு காலமாக இருக்கும் பிரச்னை.  குழந்தைகளின் பாலின விகிதம்,  தற்போது அதிகரித்துள்ளது, பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் திட்டத்தின் முன்னேற்றத்துக்கான, கண்காணிப்பு அளவாக இது உள்ளது.

* கடந்த 2014-15ம் ஆண்டில், தேசிய அளவில் 918 புள்ளிகளாக இருந்த, குழந்தை பிறப்பு பாலின விகிதம், 2019-20ம் ஆண்டில்  934 புள்ளிகளாக அதிகரித்துள்ளது.

 

* ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க ‘போஷான் 2.0’ திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. ஊட்டச்சத்தின் தரத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

* நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்னையை போக்க அங்கன்வாடி சேவைகள், பிரதமரின் வந்தனா திட்டம், வளர் இளம் பெண்களுக்காக ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் திட்டம் ஆகியவை அமல்படுத்தப்பட்டன.

* நிர்பயா நிதி திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.9288.45 கோடி மதிப்பிலான திட்டங்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.

இத்திட்டங்களுக்காக ரூ.5,712.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு, ரூ.3,544.06 கோடி வழங்கப்பட்டுள்ளது.  

* பிரதமரின் மாத்ரு வந்தனா திட்டத்தை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் கடந்த 2017ம் ஆண்டு அமல்படுத்தியது. கடந்த 3 நிதியாண்டுகளில், 1.75 கோடி பயனாளிகளுக்கு பிரசவ கால நிதியாக ரூ.5,931.95 கோடி வழங்கப்பட்டது.

2020-21ம் நிதியாண்டில் ஜனவரி 29ம் தேதி வரை, 65.12 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.2063.70 கோடி ( அரசு மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்பு உள்பட) அளிக்கப்பட்டுள்ளது

------

(Release ID 1695199)

 


(Release ID: 1695275) Visitor Counter : 246


Read this release in: English , Urdu , Manipuri