அணுசக்தி அமைச்சகம்

2031ம் ஆண்டுக்குள், அணு மின்சக்தி திறன் 22,480 மெகாவாட் திறனை எட்டும் : டாக்டர் ஜித்தேந்திர சிங் தகவல்

Posted On: 03 FEB 2021 5:07PM by PIB Chennai

மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில், மத்திய அணுசக்தி துறை இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறியதாவது:

* நாட்டின் எரிசக்தியில், அணு மின் சக்தி ஒரு முக்கியமான அங்கம். மற்ற எரிசக்தி ஆதாரங்களுடன், அணு மின் சக்தியும் உகந்த முறையில் தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது.

* அணு மின்சக்தியை 24 மணி நேரமும் உற்பத்தி செய்ய முடியும்.   இது நாட்டுக்கு நீண்ட காலம் எரிசக்தி பாதுகாப்பை வழங்கும் ஆற்றல் படைத்தது.

* தற்போது 22 அணு உலைகள் 6,780 மெகாவாட் திறனுடன் செயல்பாட்டில் உள்ளன. மேலும் 12 அணு உலைகளை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 2031ம் ஆண்டுக்குள், அணு மின்சக்தி திறன் 22,480 மெகாவாட் திறனை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* செராமிக்ஸ், கண்ணாடி, தொலை தொடர்பு சாதனங்கள், மின்கலம் மற்றும் விண்வெளித் துறைகளில் லித்தியம் முக்கிய மூலப் பொருளாக உள்ளது. 

கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள மர்லகல்லா - அலபட்னா பகுதியில் 1,600 டன் அளவுக்கு லித்தியம் வளம் இருப்பதாக அணுசக்தி கனிமவள இயக்குனரகம் நடத்திய ஆரம்பகட்ட  ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1694796

 

-------

 (Release ID: 1694963) Visitor Counter : 11


Read this release in: English , Urdu