பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு புதிய ஓய்வூதிய கொள்கை தொடங்கும் திட்டம் ஏதும் இல்லை : டாக்டர் ஜித்தேந்திர சிங் தகவல்

Posted On: 03 FEB 2021 5:08PM by PIB Chennai

மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில், மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறியதாவது:

* மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு புதிய ஓய்வூதிய கொள்கையை வகுக்கும் திட்டம் ஏதும் அரசிடம் இல்லை.

*ஓய்வூதியதாரர்களுக்கு உதவும் வகையில்,  நடைமுறைகளை எளிதாக்க, ஒய்வூதியம் மற்றும் ஒய்வூதியதாரர்கள் நலத்துறை ‘பவிஷ்யா’ என்ற மென்பொருளை உருவாக்கியுள்ளது.

* இதில் ஓய்வூதியம் தொடர்பான அனைத்து பணிகளையும் மேற்கொள்ள கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  இதில் ஓய்வூதியதாரர்களின் பணப் பலன்கள் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் வெளிப்படையாக கண்காணிக்கலாம்.

* இந்த முறை தற்போது 96 அமைச்சகங்களில் 811 அலுவலகங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளன.

* ஓய்வூதியம் பெறுவோரின் மின்னணு ஓய்வூதிய உத்தரவு (e-ppo),டிஜிட்டல் லாக்கருடன் ஒருங்கிணைக்கப்படுகிறது. ஓய்வூதியதாரரின் டிஜிட்டல் லாக்கரில், ஓய்வூதிய உத்தரவு நிரந்தர ஆவணமாக இருக்கும்.

* ஓய்வூதியம் தொடர்பான விஷயங்கள் அனைத்தும், ஓய்வூதியதாரருக்கு எஸ்எம்எஸ்/இ-மெயில் மூலம் உடனுக்குடன் தெரிவிக்கப்படும்.

* அனைத்து பணிகளும் காகித பயன்பாடு இல்லாமல் மின்னணு முறையில் மேற்கொள்ளப்படும்.

மேலும் விவரங்களுக்கு https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1694799

 

 

------


(Release ID: 1694877) Visitor Counter : 252


Read this release in: English , Urdu , Manipuri