சுரங்கங்கள் அமைச்சகம்

தாமிரப்பட்டைக்கான சுங்கத்தீர்வு 5 சதவீதத்திலிருந்து 2.5 சதவீதமாகக் குறைவு: தாமிரத்தின் மறுசுழற்சிக்கு புத்துயிர் ஊட்டும்

Posted On: 03 FEB 2021 3:10PM by PIB Chennai

மத்திய நிதிநிலை அறிக்கை 2021-22-இல் தாமிரப்பட்டைக்கான சுங்கத்தீர்வு 5 சதவீதத்திலிருந்து 2.5 சதவீதமாக குறைக்கப்படும் என்ற அறிவிப்பு நாட்டில் தாமிரத்தின் மறுசுழற்சிக்கு புத்துயிர் ஊட்டும். இதன் மூலம் சமூகம், சுற்றுச்சூழல், பொருளாதாரம் பயனடைவதுடன், வேலைவாய்ப்புக்கான சாத்தியக்கூறுகளும் அதிகரிக்கும்.

உலோகங்களின் மறுசுழற்சி செய்முறையின் போது அதன் தன்மையில் குறைபாடு ஏற்படாததால் செயல்திறன் மேம்பாடு அடைகிறது. இன்று தயாரிக்கப்படும் உலோகம் நாளை பயனற்றதாகிறது, அதன் வாயிலாக மீண்டும் அது வளமாக மாறுகிறது. தாமிரப்பட்டைக்கான சுங்கத்தீர்வு குறைக்கப்பட்டிருப்பதன் வாயிலாக அடிப்படை கச்சாப் பொருட்களின் விலை குறைந்து, அதன் மூலம் நாட்டில் மறுசுழற்சி ஊக்குவிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1694731

•••••••



(Release ID: 1694810) Visitor Counter : 148