சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

உலக ஈரநில தினத்தன்று, ஈரநில பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்கான முதல் மையத்தை இந்தியா அமைத்துள்ளது

प्रविष्टि तिथि: 02 FEB 2021 5:27PM by PIB Chennai

உலக ஈரநில தினத்தன்று, ஈரநில பாதுகாப்பு, புத்தாக்கம் மற்றும் மேலாண்மைக்கான தனது உறுதியின் ஒரு பகுதியாக, ஈரநில பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்கான முதல் மையத்தை இந்தியா அமைத்துள்ளது

இது குறித்த அறிவிப்பை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் இணை அமைச்சர் திரு பாபுல் சுப்ரியோ இன்று வெளியிட்டார். அமைச்சகத்தின் கீழ் சென்னையில் இயங்கும் நீடித்த கடலோர மேலாண்மைக்கான தேசிய மையத்தின் ஒரு பகுதியாக, ஈரநில பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்கான மையம் திகழும்.

 

ஈரநிலங்களின் முக்கியத்துவம் குறித்து இம்மையத்தின் தொடக்க விழாவில் பேசிய அமைச்சர், பல்வேறு சூழலியல் சேவைகளை ஈரநிலங்கள் சிறப்பாக ஆற்றி வருவதாக கூறினார்.

இன்று தொடங்கப்பட்டுள்ள பிரத்தியேக மையம், குறிப்பிட்ட ஆராய்ச்சி தேவைகள் மற்றும் அறிவுசார் இடைவெளிகளை பூர்த்தி செய்வதோடு, ஈரநிலங்களின் பாதுகாப்பு, மேலாண்மை மற்றும் செயல்மிகு பயன்பாட்டில் முக்கிய பங்காற்றும்,” என்று கூறினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1694463

-----


(रिलीज़ आईडी: 1694609) आगंतुक पटल : 377
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi