வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் இணைப்புகளை வழங்க உள்ள ஜல் ஜீவன் இயக்கம் (நகர்ப்புறம்)
Posted On:
02 FEB 2021 3:48PM by PIB Chennai
நீடித்த வளர்ச்சி இலக்கு ஆறின் படி, அனைத்து 4,378 நகரங்களில் உள்ள எல்லா வீடுகளுக்கும் குழாய் மூலம் தண்ணீர் இணைப்புகளை வழங்குவதற்காக ஜல் ஜீவன் இயக்கம் (நகர்ப்புறம்) வடிவமைக்கப்பட்டுள்ளதாக தன்னுடைய பட்ஜெட் உரையின் போது மத்திய நிதியமைச்சர் கூறினார்.
500 அம்ருத் நகரங்களில் கழிவுநீர் மேலாண்மை வசதியை வழங்குவது அடுத்த இலக்காகும். சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு பிரிவின் கீழ் தூய்மை இந்தியா நகர்புறம் 2.0 தொடங்கப்படும் என்றும் நிதியமைச்சர் கூறினார்.
மலைப்பிரதேச, யூனியன் பிரதேச வடகிழக்கு மாநிலங்களின் தலைநகரங்கள் உட்பட 5 லட்சத்துக்கும் அதிகமான நகரங்களில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான மாநகர பேருந்துகளை இணைப்பதற்கான திட்டம் தொடங்கப்படும் என்று நிதியமைச்சர் கூறினார். ஒழுங்குமுறை படுத்தப்பட்ட நகர பேருந்து சேவைகள், மேம்படுத்தப்பட்ட நகர்ப்புற போக்குவரத்து மற்றும் வாழ்க்கை முறையை எளிமையாக்குவதற்காக இத்திட்டம் தொடங்கப்பட போவதாக அவர் கூறினார்.
நகர்ப்புற தண்ணீர் விநியோக அமைப்பில் விடுபட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ள 2.68 கோடி வீடுகளுக்கு ஜல் ஜீவன் இயக்கத்தின் (நகர்ப்புறம்) கீழ் இணைப்புகள் வழங்கப்படும். அதேபோன்று, 500 அம்ருத் நகரங்களில் உள்ள 2.64 கோடி வீடுகளுக்கு கழிவுநீர் மேலாண்மை வசதி வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அம்ருத் இயக்கத்திற்கு தொடர்ந்து நிதி ஆதரவை வழங்குவதற்கான ரூபாய் 10 ஆயிரம் கோடி உட்பட ரூபாய் 2,87,000 கோடி ஜல் ஜீவன் இயக்கத்திற்கு (நகர்ப்புறம்) வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
தூய்மை இந்தியா இயக்கம் (நகர்ப்புறம்) 2.0-க்கு அடுத்த 5 வருடங்களுக்கு மொத்த ஒதுக்கீடாக ரூபாய் 1,41,678 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா இயக்கத்தின் (நகர்ப்புறம்) தொடர்ச்சியாக இது இருக்கும். அனைத்து நகரங்களிலும் நிதி மற்றும் செயல்பாட்டுக்கான கூறுகளாக கீழ்கண்டவை இருக்கும்:
* நீடித்து சுகாதாரம் (கழிவறைகளை கட்டுதல்)
* ஒரு லட்சத்துக்கு கீழ் மக்கள்தொகை உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் மனித கழிவு மேலாண்மை உள்ளிட்ட கழிவுநீர் மேலாண்மை (தூய்மை இந்தியா இயக்கம் (நகர்ப்புறம்) 2.0-இல் இது புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது)
* திடக்கழிவு மேலாண்மை
* தகவல், கல்வி மற்றும் தகவல் தொடர்பு
* திறன் வளர்த்தல்
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1694420
***
(Release ID: 1694495)
Visitor Counter : 371