பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமையில் இந்திய பொது நிர்வாக நிறுவனத்தின் ஜம்மு-காஷ்மீர் கிளையின் 42-வது ஆண்டு பொதுக்கூட்டம்

Posted On: 31 JAN 2021 7:21PM by PIB Chennai

இந்திய பொது நிர்வாக நிறுவனத்தின் ஜம்மு-காஷ்மீர் கிளையின் 42-வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் இந்த நிறுவனத்தின் தேசிய தலைவர் என்ற முறையில் இன்று உரை நிகழ்த்திய மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ஜம்மு காஷ்மீரில் இந்தக் கூட்டம் நடைபெறுவது 2 விஷயங்களில் முக்கியமானதாக அமைகிறது என்றார். முதலாவதாக பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் பொதுமக்கள் சேவைகள் மற்றும் ஆளுகையில் ஏராளமான முக்கிய சீர்திருத்தங்கள் அண்மைக் காலங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.‌ மற்றொரு வகையில், யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீர் இந்த சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கும், பணியாளர் மற்றும் பயிற்சித் துறையும், நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைத்தீர்ப்பு துறையும் அறிமுகப்படுத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க செயல்முறைகளையும் பின்பற்ற முடிவதாக அவர் தெரிவித்தார்.

இந்திய நிர்வாக பணிகளில் அளிக்கப்படும் முக்கியத்துவங்களில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு வருவதால் இன்றைய பணிகள் கடந்த காலத்தைவிட முற்றிலும் வேறுபட்டு இருப்பதுடன், சேவைகளை வழங்கும் முறைகளும், முசோரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அமைப்பின் பயிற்சி முறைகளும் மாற்றம் கண்டுள்ளதாகவும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

இதனைக் கருத்தில் கொண்டு இந்திய அரசு நிர்வாகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக கடந்த 7 ஆண்டுகளில் புரட்சிகரமான முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதையும் அவர் நினைவுகூர்ந்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1693762

**********************



(Release ID: 1693786) Visitor Counter : 111


Read this release in: English , Urdu , Hindi , Kannada