சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

இன்று ஒரே நாளில் சுமார் 89 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது

Posted On: 31 JAN 2021 6:51PM by PIB Chennai

. தேசிய போலியோ சொட்டு மருந்து தினத்தை, ராஷ்டிரபதி பவனில்  குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் கடந்த ஜனவரி 30 ஆம் தேதியன்று தொடங்கி வைத்தார்.

போலியோ ஞாயிறுஎன்று அழைக்கப்படும் தேசிய போலியோ சொட்டு மருந்து தினமான இன்று, நாடு முழுவதும் 5 வயதுக்கு உட்பட்ட சுமார் 89 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துகள் கொடுக்கப்பட்டன.

7 லட்சம் இடங்களில் நடைப்பெற்ற,

 போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சியில், 12 லட்சம் சுகாதாரப் பணியாளர்கள், 1.8 லட்சம் மேற்பார்வையாளர்கள் பங்கேற்றனர்.

அடுத்த 2 முதல் 5 நாட்களில், வீடு வீடாக சென்று, விடுபட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி நடைபெறவுள்ளது.

தடுப்பு மருந்து பெறுவதில் இருந்து ஒரு குழந்தையும் விடுபடக் கூடாது என்பதற்காக, பேருந்து, ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்களில் போலியோ சொட்டுமருந்து குழுவினர் பணியமர்த்தப்பட்டனர்.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் கூறுகையில், ‘‘10 ஆண்டுகளாக போலியோ இல்லாத நிலையை பராமரிப்பது, இந்தியாவின் பொது சுகாதார வரலாற்றில் மிகப் பெரிய சாதனை. தடுப்பு மருந்தால் போக்கக்கூடிய நோயால் எந்த குழந்தையும் பாதிக்கப்படக்கூடாது என்பதை உறுதி செய்ய, அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு தடுப்பு மருந்து திட்டத்தை வலுப்படுத்தி வருகிறது’’ என்றார். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1693751

*************************



(Release ID: 1693774) Visitor Counter : 209