எரிசக்தி அமைச்சகம்

பவர் கோப்பை 2021: மத்திய எரிசக்தி அமைச்சகம், பொதுத்துறை நிறுவனங்கள் இடையே நட்பு ரீதியான கிரிக்கெட் போட்டி

Posted On: 30 JAN 2021 7:14PM by PIB Chennai

மத்திய எரிசக்தி அமைச்சகத்திற்கும், எரிசக்தி துறையின் கீழ் இயங்கும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களுக்கும் இடையே இன்று (ஜனவரி 30, 2021) புதுதில்லியில் பவர் கோப்பை 2021” என்ற நட்பு ரீதியான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. மத்திய எரிசக்தி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய துறைகளுக்கான இணை அமைச்சரும் (தனி பொறுப்பு), மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் இணை அமைச்சருமான திரு ஆர் கே சிங் இந்த போட்டியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். எரிசக்தி அமைச்சகத்தின் அணியினர் அதன் செயலாளர் திரு சஞ்சீவ் நந்தன் சகாய் தலைமையிலும், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் அணியினர் பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவரும் மேலாண் இயக்குநருமான திரு ஆர் எஸ் தில்லான் தலைமையிலும் விளையாடினார்கள். இந்தியாவின் முதன்மை நீர் மின்சார உற்பத்தி நிறுவனமான தேசிய நீர் மின்சார கழகம் இந்த போட்டியைத் தலைமையேற்று நடத்தியது.

 

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்திய 2 அணியினருக்கும் தமது பாராட்டுகளைத் தெரிவித்தார். எரிசக்தி அமைச்சகத்துக்கும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களுக்கும் இடையேயான கூட்டு முயற்சிகளை மேம்படுத்துவதற்கு இதுபோன்ற நிகழ்வுகள் ஊக்குவிப்பாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

 

எரிசக்தி அமைச்சகம் இந்த போட்டியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 20 ஓவர்கள் கொண்ட இந்த போட்டியில் முதலில் ஆடிய அந்த அணி 159 ரன்களை சேர்த்திருந்த நிலையில், பொதுத்துறை நிறுவனங்கள் அணியினர் 122 ரன்களை மட்டுமே எடுத்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1693610

***************
 



(Release ID: 1693634) Visitor Counter : 131


Read this release in: English , Urdu , Hindi , Manipuri