நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
இந்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளர்- உத்தரப்பிரதேச முதல்வர் சந்திப்பு
Posted On:
30 JAN 2021 2:04PM by PIB Chennai
இந்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளர் திரு சுதான்சு பாண்டே, உணவு கழகத்தின் தலைவரும் இயக்குநருமான திரு சஞ்சீவ் குமார் ஆகியோர் உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத்தை ஜனவரி 29-ஆம் தேதி சந்தித்துப் பேசினர். நலிவடைந்த சர்க்கரை ஆலைகளை புதுப்பிப்பதற்கு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், செறிவூட்டப்பட்ட அரிசி போன்றவை குறித்து திரு பாண்டே முதலமைச்சரிடம் எடுத்துரைத்தார். உத்தர பிரதேசத்தில் உணவு தானியங்களின் கொள்முதல் மற்றும் சேமிப்பு தொடர்பான விஷயங்கள் குறித்தும் ஆலோசித்தனர்.
2020-21 காரீப் சந்தை பருவத்திற்கான நெல் கொள்முதலில் சாதனை படைத்ததற்காகவும் கொவிட்-19 காலகட்டத்தில் கோதுமையை கொள்முதல் செய்ததற்காகவும் மாநில அரசு அதிகாரிகளையும் இந்திய உணவு கழகத்தையும் முதலமைச்சர் பாராட்டினார். கொள்முதலை மேம்படுத்துவதற்காக சேமிப்பு திறனை அதிகரிப்பது தொடர்பான கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
லக்னோவில் உள்ள இந்திய உணவுக் கழகத்தின் மண்டல அலுவலகத்தை பார்வையிட்ட திரு சுதான்சு பாண்டே, மாநில அரசு அதிகாரிகள், இந்திய உணவு கழகம், கொள்முதல் முகமைகள், மத்திய சேமிப்பு கிடங்கு கழகம், மாநில சேமிப்பு கிடங்கு கழகம் ஆகியவற்றின் அதிகாரிகளுடன் உத்தர பிரதேசத்தில் உணவு தானியங்களின் கொள்முதல் மற்றும் விநியோகம் தொடர்பான விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1693546
***************
(Release ID: 1693577)